கல்முனை வடக்கு விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது!!
விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 37 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக அமரர். சௌந்தரம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக 18 ஓவர் கொண்ட கடின பந்து சுற்றுப்போட்டியானது கழகத்தின் தலைவர் v. தயாபரன் (B-Tech) தலைமையில் 19/07/2024 அன்று விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டிக்கு பிரதம அதிதியாக Eng. தம்பிபிள்ளை உருத்திரன் ( victoria state engineering council co. Ordinater – Australia ) அவர்களும் சிறப்பு அதிதியாக திரு. ஆறுமுகம் தவராசா ( முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை தொழில்நுட்பவியலாளர் ) அவர்களும் கௌரவ அதிதிகளாக திரு.K. தட்சணாமூர்த்தி ( VSC போசகர் ) lions.S. நேசராசா ( உத்தரவு பெற்ற நில அளவை முகாமையாளர் ) திரு. மு.ரமணிதரன் ( VSC கிரிக்கெட் முகாமையாளர் ) திரு. கோ. உமாரமணன்( செயலாளர் VSC) திரு. ம. குமுதன்( பொருளாளர் VSC) மற்றும் கழக அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டியில் விவேகானந்தா விளையாட்டு கழகமும் கல்முனை வடக்கு விளையாட்டு கழகமும் மோதின இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விவேகானந்தா விளையாட்டுக்கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடி 18 ஓவர்களுக்கு 139 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை விளையாட்டு கழக அணியினர் 18 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களைப் பெற்று ஐந்து விக்கெட்டுகளினால் விவேகானந்தா விளையாட்டு கழக அணியினரை வீழ்த்தி சௌந்தரம்மா ஞாபகார்த்த கிண்ணத்தை கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினை 54 ஓட்டங்களைப் பெற்ற அணியின் தலைவர் ரமேஷ்யும் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதினை மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய உமாகரனும் பெற்றுக் கொண்டார்.