பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக அந்த
நாட்டில் உள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட
கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்
துள்ளது.


50 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் பங்களாதேஷின் 3 பல்கலைக்கழகங்களில் கல்விகற்கின்றனர் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டு
தேவையான அறிவுறுத்தல்களை வழங்க இலங்கைக்கான பங்களாதேஷ்
உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கைஎடுத்துள்ளது.


மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பில் அவர்கள் கற்கும்
பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பங்களாதேஷில் நிலவும் குழப்ப நிலைமை காரண
மாக இதுவரையில் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்
தல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


அந்த மாணவர்கள் நாடு திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகள்
செய்துகொடுக்கப்படும் என அமைச்சுகுறிப்பிட்டுள்ளது.
பங்களாதேஷில் கடந்த 20 நாள்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைதியின்மையினால் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலைமை தொடர்ந்தும் மோசமடைந்துள்ளதால் பங்களாதேஷ் முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.