இன்று முதல் அமுலாகும் வகையில்மின் கட்டணத்தை 22.5 சதவீதத்தால்
குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி
வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவுக்குஅனுப்பியிருந்தது.


இதற்கமைய, 0 முதல் 30 வரையானமின் அலகு ஒன்றின் கட்டணம் 2ரூபாவாலும், 30 முதல் 60 வரையான அலகு ஒன்றின் கட்டணம் 11 ரூபாவாலும்
குறைக்கப்பட்டுள்ளது.
60 முதல் 90 வரையான அலகு ஒன் றின் கட்டணம் 12 ரூபாவாலும்,
90 முதல் 120 வரையிலான அலகுஒன்றின் கட்டணம் 20 ரூபாவாலும்
குறைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள்
ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, வீட்டுப் பாவனை மின்கட்டணம் 27 சதவீதத்தாலும், மதஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 30சதவீதத்தாலும், விருந்தகங்கள் மற்றும் கைத்தொழிற்துறைக்கான கட்டணம் 25 சதவீதத்தாலும் குறைவடைகின்றது