கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கு அமரர் பவளகாந்தன் இரட்ணமாலா நினைவாகவும் தாகசாந்தி பணி!
கதிர்காம பாத யாத்திரிகர்களின் நன்மை கருதி தாகசாந்தி சேவைகளும், அன்னதானங்களும் யாத்திரை ஆரம்பித்து காட்டுப்பாதையில் இறுதிவரை பல இடம் பெற்றன. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சிலர் தங்களது இறந்த உறவினர்கள் நினைவாகவும் இந்தப் பணிகளுக்கு நிதி உதவி வழங்கி இருந்தனர். இவ்வாறு கனடாவில் வசிக்கும் பவளகாந்தன் அவரது துனைவியான அமரர் இரட்ணமாலா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவாக சுமார் ஒரு இலட்சம் நிதிப்பங்களிப்பில் தாகசாந்தியும், உணவுப்பொதிகளும் வழங்கும் தொண்டை செய்திருந்தார்.
பாத யாத்திரை செல்லும் அடியவர்களுக்கு இறந்த தங்கள் உறவுகள் நினைவாக இவ்வாறான பணியினை தொண்டு அமைப்புக்கள் ஊடாகவோ, தனிப்பட்ட ரீதியில் நேரடியாகவோ தொடர்ச்சியாக செய்வதானது மேலும் பயனுள்ள பணியாகும். இந்த புண்ணிய செயலுக்கும் இவ்வாறான பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அமைப்புக்களுக்கும் யாத்திரிகர் குழுவினைச் சேர்ந்த ஜெயசிறில் ; நன்றி தெரிவித்தார்.
இம்முறை சுமார் 40 ஆயிரம் பக்கதர்கள் பாத யாத்திரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




