(அஸ்ஹர் இப்றாஹிம்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி சம்பியனானது.


இலங்கைக் கூடைப்பந்தாட்ட சம்மேளத்தால் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டது.


இதிலேயே கல்முனை கார்மல்பற்றிமா தேசிய கல்லூரி மாணவிகள் முதலாம் இடத்தைப் பெற்றுச் சம்பியனாகி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகினர்.
இந்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி ஹயாளினி சிவாகரனுக்கும், பயிற்றுவிப்பாளரான க.தரிஷாந்தனுக்கும் , வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பெற்றோர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.