பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில்
ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு
பேரா உதவிக் கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கான ஒரு நாள் இயற்கை விவசாய வீட்டுத் தோட்டச் செயலமர்வு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவர் – வினோஜ்குமார் தலைமையில் பாடசாலையின் விஜயகுமாரன் அரங்கில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலையின் அதிபர் இளங்கோவன் அவர்களும், நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் உப தலைவர் லுசாந் அவர்களும் இளைஞர் சேவை அதிகாரி டொஜானி அவர்களும் மற்றும் பபேசா மற்றும் லோஜி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இச் செயலமர்வில் போது மண் பண்படுத்தல், விதைகள் நடுகை, வினைத்திறனான நீர்ப்பாசனம், வீட்டுத் தோட்ட முகாமைத்துவம், பீடைக்கட்டுப்பாடு முறைகள், நிலைபேறான வீட்டுத் தோட்ட முயற்சியாண்மை போன்ற செயற்பாடுகளை மாணவர்களுக்கு செயன்முறையாக காட்டப்பட்டன. இத்திட்டம் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்குவதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் பெற்றோருடன் சேர்ந்து வீட்டுத் தோட்டம் செய்வதால் நஞ்சற்ற உணவு உற்பத்தி மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் 8000/-க்கு மேல் சேமிக்க முடியும் என்பதை இலக்காகக் கொண்டு இச் செயலமர்வு திட்டமிட்டிருப்பது விசேட அம்சமாகும்.
இதன் போது 60 மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டம் செய்வதற்கான பயிர்கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன. பேரா உதவிக் கரங்கள் அமைப்பு இலங்கையில் பல நிலைபேறான மனிதநேயப் பணிகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










