தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தனின் புகழுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதிஅஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக் கும் கொழும்பு – பொரளை ஏ.எவ்.றேமண்ட்ஸ மலர்ச்சா லைக்கு நேற்றுப் பிற்பகல் சென்ற ஜனாதி
பதி ணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் துணைவியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கஆகியோர் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய
தோடு, அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.

சம்பந்தரின் உடலுக்கு ஜனாதிபதி உட்பட பல அரசியல் தலைவர்களும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தினர். பல உலகத்தலைவர்களும் இரங்கல் செய்தியையும் வெளியிட்டுள்ளனர். இன்றைய தினம் நாடாளுமன்றத்திலும் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு இறுதி கிரியைக்காக சம்பந்தரின் சொந்த இடமான திருகோணமலைக்கு உடலம் எடுத்துச்செல்லப்படும்.

இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 07/07/2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று சடலம் மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் அக்கினியுடன் சங்கமமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அன்னாரின் இல்லத்தில் இந்து மதமுறைப்படி கிரியைகள் இடம்பெற்று பின்னர் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை அரச நிகழ்வாக நடத்துவதற்கு முதலில் சிலரால் ஆலோசிக்கப்ப்பட்டாலும் சம்பந்தனுடைய குடும்பத்தினர் அதனை ஏற்கவில்லை.