அம்பாறை அரசாங்க அதிபருடான சந்திப்பில் திருப்தியில்லை : கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவிப்பு


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று ( 24)கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக பெருமளவான மக்கள் குவிந்து கல்முனை மாநகரை முற்றுகையிட்டிருந்தனர்.

செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய மக்கள் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனும கோஷத்துடன் பெருந்திரளாக குவிந்திருனர்.

காலை 8.00 மணிமுதல் பி.ப வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன் நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன.

அரச அரச அதிகாரிகளே எமது நியாயமான கோரிக்கைக்கு பதில்என்ன? எனும் விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் ஊடாக வீதி மறியல் போராட்டத்தை கைவிடுமாறும் இன்று நேரில் கலந்துரையாடவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கல்முனை வடக்கு பிரதேச சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.கலையரசன் செ.கஜேந்திரன் ஆகியோர் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபருடனான சந்திப்பில் ஈடுபட்டனர்.
இந் சந்தி;ப்பு தொடர்பாக தொடர்பாக கலந்து கொண்ட பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்

அரசாங்க அதிபருடன் சுமார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது . கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது மேற்கொள்ளப்படும் அதிகார அத்துமீறல்கள் , மக்களுக்கான அரச சேவையை வழங்குவதற்கு இடப்படும் முட்டுக்கட்டைகள் ,அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக விளக்கியிருந்தோம்.

அரசகாணிகள் அபகரிப்புக்கள், கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் இதற்கு உடைந்தையாக செயற்படும் செயல்கள் என்பவற்றையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.


சுமார் மூன்று மாதங்கள் கடந்து அமைதிப்போராட்டத்தில் ஈடுபடும் இந்த பொது மக்களை நேரில் வந்து சந்திக்காதது தொடர்பாகவும் எமது கவலையையை சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த மாத இறுதியில் வருவதாகவும் ,தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ளவதாகவும் கூறினார். ஆனால் இந்த சந்திப்பும், அரசாங்க அதிபரின் பதிலும் எமக்கு திருப்பதியானதாக இல்லை எனவும் கருத்து தெரிவித்தனர்.

https://www.facebook.com/kalmunainet/videos/348947561358967