கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று ( 24)கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர். செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய மக்கள் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனும கோஷத்துடன் பெருந்திரளாக குவிந்துள்ளனர்.

அரச அரச அதிகாரிகளே , அரசாங்கமே எமது நியாயமான கோரிக்கைக்கு பதில்என்ன? அதிகார பயங்கரவாதத்துக்கு அரசு துணை போகக்கூடாது ,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பக்கச்சார்பாக செயற்படுகின்றாரா? எனும் விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன் வீதிப்போக்குவரத்தை மறித்து ,வீதியில் அமர்ந்தும் போராட்டம் தொடர்கிறது. கல்முனை மாநகரம் ஸ்தம்பித்துள்ளது. பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் பிரமுகர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் ,பொதுமக்கள் என பல ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர்.

தொடர்ந்து மேலதிக தகவல்கள் வரும்

https://www.facebook.com/kalmunainet/videos/336826352796412