பெரியநீலாவணையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு.

(பிரபா)

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை -02, விஸ்ணு கோயில் வீதியில் உள்ள 07, வீட்டுத்திட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் 60 வயது மதிக்கத்தக்கவர் என்றும்,அக்கரைப்பற்றை பூர்வீகமாக கொண்ட. இவர் மன்னார் பகுதியில் திருமணம் முடித்து தனது குடும்பத்தை பிரிந்து பெரியநீலாவணையில் தற்காலிகமாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார் என்றும் தெரியவருகிறது.
மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.