அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா -2024 கொழும்பு இராமகிருஷ்ண மிஷன்மண்டபத்தில் நடைபெற்றது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி நாள் நிகழ்விக்சான்றோர்கள் கௌரவிப்பு இடம்பெற்றது.

எலும்பியர் வைத்திய நிபுணர் டாக்டர் சண்முகம் ஸ்ரீதரன், தமிழறிஞர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், வட மாகாண பிரதம செயலாளர் லட்சுமணன் இளங்கோவன், முன்னாள் தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் எம்.பி., கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கம்பன் புகழ் விருது பெறும்தமிழ்நாடு எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் தலைவர் ஈ.கணேஷ் தெய்வநாயகம், மலேசிய எம்.பி. டத்தோ ஸ்ரீசவணன், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து ஆகியோர்கள் முன்னிலையில் மாலையிட்டுபொன்னாடை போர்த்தி விருதும் விசேட பட்டமும் வழங்கி
கௌரவிக்கப்பட்டனர்.


அத்துடன் கம்பவாரிதி இ.ஜெயராஜ், தலைமையில் நீதிமன்ற விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பேராசிரியர் சுல்தான் பர்வினா, வழக்கறிஞர் ஸ்ரீமதி கே சுமதி ஆகியோர்களும் பங்குபற்றி சபையோரை மகிழ்வித்தனர்.