அம்பாறை வட்ட மடு மேச்சல்தரையில் சட்டவிரோத விவசாய நடவடிக்கை :கால்நடைகளை கொல்லும் ஈனச் செயலும் தொடர்கிறது – பாற்பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்குமா ?
-ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர் சங்கம்-

வளம்மிகு இலங்கை திருநாட்டில் இயற்கையாகவே விவசாயப்பயிர்ச் செய்கைகாகவும் நெற் செய்கைக்காகவும் கால்நடைகளுக்கான மேச்சல்தரையாகவும் மற்றும் பணப்பயிர் செய்கைக்கான (தேயிலை , இறப்பர்) மீன்பி (நன்னீர் உவர் நீர் ) வளங்களும் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளன.

இது எமது நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை. இவ்வாறான இயற்கையான வளப்பயன்பாட்டுக்கு மாறாக பயன்படுத்துவதானது இயற்கையை அழிப்பதுடன் எமது வளத்தை மாற்றீடாக பயன்படுத்துவதால் பலனை மட்டுப்படுத்துவதுடன் காலப்போக்கில் அது அழிந்து போகும் நிலையே ஏற்படும்.


இந்த நாட்டில் ஒவ்வொரு வளங்களும் அதன் அமைவிடத்திற்கேற்ப இலங்கை வரலாற்றில் வளத்தை பயன்படுத்தி பயன்பெறும் வகையில் சட்ட ரீதியாக ஒவ்வொரு வகையான விவசாயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு இயற்கையாக அமையப்பெற்தே கால்நடை விவசாயத்திற்கான இடமாக காலம் காலமாக இருந்து வருகிறது அம்பாறை மாவட்டத்தில் உள்ள வட்டமடு மேச்சல்தரை. இதனை சட்டத்திற்கும் இஇயற்கைக்கும் முரணாக அபகரிக்கும் முயற்சிகளும் தனியார் அத்துமீறல்களும் கால்நடை விவசாயத்திற்கான குறித்த இடத்தில் அத்துமீறிய விவசாய செய்கை;கான ஆக்கிரமிப்புக்களும் தொடர்கதையாகவே உள்ளன.
இவற்றை பாதுகாக்கவும் கால்நடை விவசாயத்தை தொடரவும் ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர் சங்கம் தொடர்ந்து போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளமை வேதனையே.


முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்ப்பராஜா தனது ஆளுமை சட்ட ரீதியான ஆவணப்படுத்தலால் குறிப்பிட்டளவு இந்த அத்துமீறலை தடுக்க முடிந்தாலும் சில தூர நோக்கற்ற இனவாத அரசியல் கும்பல்களின் துணையுடன் இந்த மேச்சல் தரைகளை ஆக்கிரமிப்பு செய்யும் செயற்பாடும் கால்நடைகளை கொல்லும் ஈனச் செயல்களும் அவ்வப்போது தொடர்ந்துகொண்டுதான் உள்ளன.
அம்பாறை மாவட்டத்திலுள்ள வட்டமடு மேச்சல் தரை தொடர்பான வரலாற்று பார்வை…

அம்பாறை மாவட்டத்தில் கால்நடை விவசாயத்திற்குரிய இடமாக காலா காலாமாக காணப்படும் வட்டமடு மேச்சல் தரையானது கால்நடைகளை பராமரிப்பதற்கும் அதன் இன விருத்தியை பெருக்குவதற்கும் ஈர வலய பிரதேசமாக தெரிவு செய்யப்பட்டு மேட்டு நிலப்பகுதியை பசு மாடுகளுக்கும் , தாழ் நிலப்பகுதியை எருமை மாடுகளுக்கும் ஏற்ற வகையில் மூன்று குளங்களுக்கு மத்தியில் ( சாகம குளம் ,ருபஸ் குளம் ,வம்மியடி குளம்) 3850 ஏக்கர் நிலத்தை மேச்சல் தரையாக எல்லை நிர்ணம் செய்து அப்போதைய அரசாங்க அதிபர் டி.விஜயசிங்க அவர்களினால் எழுத்தானை பிறப்பித்து குறித்த பிரதேசத்திற்குள் காடுகளை வெட்டுவதற்கோ , விவசாயம் செய்வதற்கோ தடை அறிவித்தல்விடுக்கப்பட்டதுடன் குறித்த நிபந்தனைகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் எழுத்தாணை 1974.08.27 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்தன.


அதன் பின்னர் கால்நடை பாற் பண்ணையாளர்களின் வேண்டுகோளையடுத்து அப்போது கால்நடை அமைச்சராகவிருந்த சௌவியமூர்த்தி தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கால்நடைகளுக்குரிய ஊ 03 எனும் புல்லின வகைகளை கொண்டு வந்து வட்டமடு மேச்சல் தரையில் நடப்பட்டமையும் வரலாற்று பதிவாகும்.


புhல் உற்பத்தியின் தேவையை கருத்தில் கொண்டு அதன் முக்கியத்துவத்தின் காரணமாக உற்பத்தியை பெருக்குவதற்காக 4000 ஏக்கர் நிலத்தை நில அளவீட்டு திணைக்களத்தினால் 1972ஆம் ஆண்டில் இருந்து 1975 ஆம் ஆண்டு காலப்பகுதிவரை அளவீடு செய்யப்பட்டு அதற்கமைவாக எல்லைகள் வகுக்கப்பட்டதுடன் குறித்தொகுக்கப்பட்ட மேச்சல்தரை பகுதியில் காடுகள் , வெட்டுதல் விவசாயம் செய்பவர்களின் நடவடிக்கைகளை தடுக்கும்வகையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வர்த்தமானி பிரசுரம் செய்ய வேண்டும் எனும் நோக்குடன் 1976.06.17 நாட்டுக்கு நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கமைவாக அப்போதைய நாட்டின் ஜனாதிபதியான வில்லியம் கோபல்லாவ அவர்களினால் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும் ( வர்த்தமானி இல 217/51).


இவ்வாறு சட்ட ரீதியானதும் நாட்டின் பால் உற்பத்தி வருமானத்தை கூட்டுவதற்குமாக பொருத்தமாக தெரிவு செய்யப்பட்டு சட்ட ரீதியாக கால்நடை மேச்சல் தரையாக பயன்படுத்தப்பட்டு வரும் வட்டமடு மேச்சல் தரை காணிகளில் பின் நாடகளில் அத்துமீறி விவசாயம் செய்யும் சட்டத்துக்கு முறணான செயற்பாடுகள் சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் இ போலி விவசாய காணி அனுமதிப்பத்திரங்கள் தயாரிக்கப்படுவதும் அதற்கெரிராக பால் பண்ணையாளர்கள் போராடுவதும் தொடர்கின்றமையும் குறுகிய நோக்கோடு சில அரசியல்வாதிகள் குறித்த அத்துமீறலுக்கு துணைபோவதும் வேதனையான விடயமே.


சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களால் அவ்வப்போது கால்நடைகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.


ஆகவே குறித்த ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொறுப்பு வாயந்த அரச அதிகாரிகள் அமைச்சர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் உரிய நடிவடிக்கை எடுத்து பால் உற்பத்திக்கும் கால் நடை வளப்பிற்கும் உரிய பாதுகாப்பையும் நீதியையும் பெற்றுத்தர வேண்டும் என ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைக்கின்றனர்.