சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கல்முனை கடற்கரை பிரதேசத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக், பொலித்தீன்களை கழிவுகளை அகற்றும் நிகழ்வு, இன்று 12.06.2024 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி APRS. சந்திரசேன அவர்களின் தலைமையிலும் பிரதிபணிப்பாளர் வைத்தியகலாநிதி.J. மதன் அவர்களின் வழிகாட்டலுடன் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வானது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுடன் Lyca gnanam foundation உத்தியோகத்தர்கள், கல்முனை கடற்படையினர், கல்முனை இராணுவத்தினர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்திகோத்தர்தரகள், ஜனாதிபதி சுற்றாடல் விருது கல்முனை பிராந்திய மாணவர்கள், கல்முனை மாநகரசபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் தொண்டர்களின் உதவியுடன் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது கடற்கரை பிரதேசத்தில் வளரக்கூடிய மரநடுகை நிகழ்வுகளும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும். இந்நிகழ்விற்கான அனுசரனையினை Lyca Gnanam foundation நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.

n commemoration of International Environment Day, a waste removal event to clear plastic and polyethylene waste found in the Kalmunai beach area was conducted today, June 12, 2024, under the leadership of Dr.APRS. Chandrasena, the Director of Kalmunai North Base Hospital, and with the guidance of Deputy Director Dr.J. Mathan.

The event was organized with the participation of hospital staff and employees, Lyca Gnanam Foundation staff, Kalmunai Navy personnels, Kalmunai Army personnels, Central Environmental Authority staff, President’s Environmental Award Kalmunai regional students, Kalmunai Municipal Council staff and employees, and well-wishers and volunteers.

A tree planting event was also held as a special feature of the event to promote the growth of trees in the coastal area.