‘இந்தியத் திருநாட்டின் வரலாற்றில் மூன்றாவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்கும் உங்களை வாழ்த்துவதில் ஆனந்தமடைகின்றேன். பாரத தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் அவர் மக்களால் மீண்டும் பாரதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.’

இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அகில இலங்கை இந்து மாமன்ற
உப தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்
தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
‘தாங்கள் இலங்கைத் தமிழர்களின் நீண்டகாலப் உணர்வார். உங்கள் பதவிக் காலத்தில்
இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமானதீர்வைப் பெற்றுத் தருவீர்கள் என இவ்வேளையில் எதிர்பார்க்கின்றோம்.
தங்களது ஆத்மீக பலமும் ஆத்மீக பலமும் கடின உழைப்பும் இந்திய தேசத்தை மேலும் சிறப்பிக்கும் என்பதில் ஐயமில்லை. தங்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றோம்.’ – என்றுள்ளது.