சீனாவில் இடம்பெறும், அரசியல் கட்சிகளுக்கான மாநாட்டில் தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளை தலைவர் நிதான்சனும் உரை!
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அந் நாட்டின் வர்த்தக அமைச்சின் அனுசரணையில் சர்வதேச நாடுகளின் கட்சிகளை பிரநிதித்துவப்படுத்தி மாநாடு இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து அக்கட்சியின் கல்முனை கிளை தலைவர் அருள்ஞானமூர்த்தி நிதான்சன் பங்குபற்றியுள்ளார். இம் மாநாட்டில் இலங்கை நாட்டின் தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால கட்டமைப்புக்களை கட்டியெழுப்புதல் மற்றும் வடகிழக்கில் அதிகார பரவலாக்கல் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.