(வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நதி கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் நாளை திருகோணமலையைச் சென்றடையவுள்ளனர்.


( 29) புதன்கிழமை கோபாலபுரத்தில் தரித்து நிலாவெளியில் தங்குவார்கள். அங்கு கோபாலபுரத்தைச் சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வாழும் ஆசிரியை திருமதி விஜயகுமாரி விக்னேஸ்வரன் அனுசரணை வழங்கவுள்ளார்.
நாளை (30) திருகோணமலை நகரை வந்தடைவார்கள். கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இந்த பாதயாத்திரை இன்று 18 ஆவது தினமாகப் பயணிக்கின்றனர்.


கதிர்காம பாதயாத்திரை பேரவையின் தலைவர் ஜெயாவேல்சாமி தலைமையில் இந்த குழுவினர் பயணிக்கின்றனர்.
மொத்தமாக 124 அடியார்கள் இந்த பாதயாத்திரை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.