மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 25 வயதுடைய தாய்
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பில் இயற்கையாக கருத்தரித்து ஒரே சுகபிரசவத்தில் 4 பிள்ளைகளை கடந்த ஏப்பிரல் மாதம் 5ம் திகதி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளதாகவும் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக நேற்று புதன்கிழமை (22) மட்டு போதனாவைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
மட்டு போதனாவைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
மட்டு புதுக்குடியிருப்பைச் சோந்த 25 வயதுடைய கரிகரன் கிருஸ்ணவேனி வெளிநாட்டில் இருக்கும் போதே கருத்தரித்துள்ள இவர் 8 வாரங்களில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இவர் மட்டு போதனாவைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் கிளினிக்க்கா வந்த இவரை கதிர்வீச்சு மூலம் சோதனை செய்தபோது இவர் 4 குழந்தைகள் கருத்தரித்திருப்பதை கண்டுபிடித்தோம்
குறித்த தாய் ஏற்கனவே சிசேரியன் மூலம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ள இவர் இயற்கையாகவே கருத்தரித்துள்ளார் அதனை தொடர்ந்து அவரை மிக நெருக்கமாக கண்காணிப்பில் ஈடுபட்டு அவரை பராமரிப்பு செய்துவந்தோம்
இந்த நிலையில் 32 வாரமும் 5 நாட்களுமான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏப்ரல் 5ம் திகதி 4 குழந்தைகளை சுக பிரசவம் மூலம் ஒரு ஆண்; 3 பெண் உட்பட 4 பேரை பெற்றெடுத்தார்.
மகப்பேற்று வைத்திய நிபுணர் எம்.சரவணன்இ தலைமையிலான வைத்திய குழாங்கள் இதன் பொது செயற்பட்டு வெற்றிகரமாக செயற்பட்டனர் என்றார்.




