ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ibrahim Raisi) பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளான இடத்தை தேடும் பணியில் 32 மீட்புப்பணி வீரர்களும் சிறப்பு ஆளில்லா விமானமும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கிழக்கு அஜர்பைஜான் (Azerbaijan) மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில், உலங்கு வானூர்தியின் உடைவுகளாக இருக்கலாம் என்று நம்பப்படும் வெப்ப மூலத்தை அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் உலங்கு வானூர்தியில் பயணித்தவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் உட்பட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியை கண்டுபிடித்ததாக மீட்பு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் ரைசி உட்பட அதில் பயணித்த ஜனாதிபதி ரைசி உட்பட்ட எவரும் உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்று ஈரனிய செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.
tamilwin