முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு தடை . இன்று கல்முனை நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகினர் . ஆலோசனையுடன் மன்றில் தடை நீக்கம் செய்யப்பட்டது
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிஸ்த்தரும் காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன் மற்றும் ,விமலநாதன்,மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரன் பிரதீபன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோர் மீது பெரிய நீலவணை போலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட தடை உத்தரவு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றால் அகற்றப்பட்டது.
இந்த தடை உத்தரவை நீக்க கோரி குறித்த நபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான சிவரஞ்சித் மற்றும் மதிவாணன், ரிபாஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். நீதிபதியால் உறவுகளை நினைவு கூறுவது தொடர்பாக சட்டத்துக்கு முறனில்லாத வகையில் நினைவு கூறுவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் விமலநாதன் ஆகியோர் இந்த தடை உத்தரவை நீக்க கோரி நீதி மன்றில் வழங்கு பதிவு செய்திருந்தார்கள் எனபதுடன் சட்டத்தரணிகள் இந்த தடை உத்தரவை நீக்க கோரி நீண்ட விவதாங்கள் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.