கனடா நாட்டில் அதிவேக வளர்ச்சியின் முன்னணியில் திகழும் பிரம்ரன் மாநகரத்தின் (City of Brampton) ஐம்பதாவது பிறந்தநாளையொட்டிய நிகழ்வில் (Brampton 50th Birthday Celebration) நகரத்தின் சிறந்த சாதனையாளர்களையும் மற்றும் தொண்டர் சேவையில் அளப்பெரிய பங்காற்றிய சிறந்த குடியுரிமையாளர்களையும் அடையாளம் கண்டு
சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் (09.052024) அன்று பிரம்ரன் மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ள றோஸ் தியேட்டரில் (Brampton 50th Birthday Celebration) நடைபெற்றது.


ஆயிரக்கணக்கான விருந்தினர்கள், பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரான ( பெரிய கல்லாறு இகல்முனை) பல்வேறு சமூகப்பணிகளையும் முன்னெடுத்துவரும் கனடாவில் வசித்துவரும் உதவும் பொற் கரங்கள் அமைப்pன் தலைவரான (ஊநுழு. ர்நடிiபெ புழடனநn ர்யனௌ) விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு ஒரே நாளில் ஒரே மேடையில் அதி உயர்ந்த விருதுகளான ‘பிரம்ரன் ஐப்பதாவது பிறந்தநாள் சிறந்த குடியுரிமைக்கான விருது’ ‘டீநளவ ஊவைணைநn டீசயஅpவழn 50வா டீசைவானயல ஊநடநடிசயவழைn யுறயசன’ மற்றும் முப்பத்தைந்து வருட நீண்டகால சேவைக்கான தொண்டர் விருது

(35 லுநயசள டுழபெ ளுநசஎiஉநள ஏழடரவெநநச யுறயசன’ ஆகிய இரண்டு
விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை கனடாவில் மட்டுமன்றி உலக
லாவியரீதியில் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

கனேடிய அரசாங்கத்தில் அதிஉயர் பதவியில் நீண்டகாலமாக பணியாற்றிவருபவரும் கனேடிய அமெரிக்கா நாடுகளின் கணக்காளர் நெறிக்கான அதிஉயர் விருதினை (குஊPயு) பெற்றுக்கொண்டவரும், சிரேஸ்ர ஊடகவியலாளருமான இலங்கேஸ் தருமலிங்கம் அவர்களின் பரிந்துரையின் பிரகாரம் (ழேஅiயெவழச) இவ் உயரிய இரு விருதுகள் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (ழேஅiநெந) அவர்களுக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


கனடாவில் ஈழத்தமிழர்களின் சாதனைகள் நாளாந்தம் வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் விஸ்வலிங்கம் அவர்களின் அளப்பெரிய சமூகத்தொண்டினையும் நீண்டகால தொண்டர் சேவையினையும் அங்கீகரித்து இவ் உயரிய இரண்டு விருதுகள் பிரம்ரன் மாநகரத்தால் வழங்கி கௌரவிக்கப்பட்டமைக்கு பலரும்
குறிப்பாக மாநகர முதல்வர் முதல் ஏராளமான விருந்தினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பாராட்டுதல்களை தெரிவித்தனர்.

சமூகத்தில் எமக்குள்ள சேவைப் பங்காளிகளுடன் சேர்ந்து, வயதில் கூடிய வயதுவந்தவர்களின் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டு நாம் செயல்படுவதன் மூலம், வட அமெரிக்காவில் வயதில் முதியவர்களாக மாறுவதற்கு மிகச்
சிறந்த இடமாக ஒன்ராறியோ தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய முடியும் என்று திடமாக தாங்கள் நம்புவதாக விஸ்வலிங்கம் இரண்டு விருதுகளை பெற்றபின் ஊடகத்தினரிடமும் பொதுமக்களிடமும் தெரிவித்தார்;.