பொது வேட்பாளர் முயற்சி முட்டாள்தனம் – இந்த விஷப்பரீட்சைக்கு இறங்க வேண்டாம் சம்மந்தர் ஆலோசனை – ஒஸ்லோ இணக்கப்பாட்டுக்கும் இது பாதிப்பாகும் எனவும் விபரிப்பு


‘உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு – கிழக்குக்கு
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான் சர்வதேச மட்டத்
தில் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக்கொண்ட கடைசி விடயம். அதற்கு பாதிப்பு- குந்தகம் ஏற்படுத்தும் விதத்திலான முடிவுஎதையும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற
விஷப் பரீட்சை ஊடாக செய்வதற்குத் தமிழரசுக் கட்சியினர் இணங்கி விட – இறங்கி
விடக் கூடாது.’இவ்வாறு தமது தமிழரசுக் கட்சியினருக்கு ஆலோசனை – வழிகாட்டல் வழங்கியுள்ளார் அக்கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். தமது கொழும்புஇல்லத்தில் சந்தித்த கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்எம்.ஏ.சுமந்திரன் மூலமே இந்தச் செய்தியை – தமது நிலைப்பாட்டை அவர்வெளிப்படுத்தியுள்ளார்.


என இன்று காலை முரசு மின்னிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வருமாறு,


இன்றைய சந்திப்பின்போது சம்பந்தன்தெரிவித்த விடயங்கள் வருமாறு:-
‘ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் திட்டத்தின் ஆபத்துக் குறித்து
தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசி விளக்கியுள்ளேன். இதுகுறித்து மேலும் விவரமாகப் பேசுவதற்காக அவரைக் கொழும்புக்கு வரும்படி அழைத்திருந்தேன். கொழும்புக்கு வர இயலாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.அதனால் அவருடன் மீண்டும் தொலை
பேசியில் விவரமாகப் பேசவுள்ளேன்.இந்த வாரத்தில் சிறீதரன் எம்.பியும்
என்னை வந்து சந்தித்தார். அவருக்கும் எல்லாவற்றையும் விளக்கியுள்ளேன்.
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதுஎன்பது It’s a silly idea (Crazy idea too), (பைத்தியக்காரத்தனமான திட்டமும் கூட). இது தமிழர்களின் எதிர்காலத்தை
ஆபத்துக்குள் சிக்க வைக்கும் விஷப்பரீட்சை.தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் மிக நீண்டது. பல கட்டங்களைத்தாண்டி வந்துள்ளோம். ஒஸ்லோ
அறிவிப்பு அதில் உச்சமானது. உள்ளகசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்
இணைந்த வடக்கு – கிழக்குக்கு சமஷ்டிமுறையிலான தீர்வுக்கு அந்த அறிவிப்பு
மூலம் இலங்கை அரசு இணங்கிவந்துள்ளது.அதற்குக் குறைந்த எதற்கும் இணங்
கும் ஏற்பாடுகளுக்கு நாம் போக முடியாது.அந்த நிலைப்பாட்டை சிதறடிக்கும் வித
மான ஒரு விஷப் பரீட்சைக்குப் பொதுவேட்பாளர் என்ற அடிப்படையில் தமிழினம் இணங்கவோ, இறங்கவோ கூடாது.வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில்ஓர் ஏற்பாடு உண்டு. இணைப்பைநிரந்தரமாக்க முன்னர் கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அனுமதிபெற வேண்டுமென்பதே அது. ஆனால்,அது 19 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படாமல் இணைப்பு நீடிக்கப்பட்டது
கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள்அனைவரும் மீளக் குடியமர்த்தப்பட்டபின்னரே அந்தத் தேர்தலை நடத்தவேண்டும், நடத்த முடியும் என்ற ஏற்பாடும்அதில் உள்ளது. ‘இப்படி அந்த ஏற்பாடு இருக்கின்ற காரணத்தினால் இனி எப்போதும் அத்தகைய சர்வஜன
வாக்கெடுப்பை நடத்த முடியாது – வடக்கு,கிழக்கு இணைப்பை வருடாந்தம் நீடிப்பதைத் தவிர’ – என்று தமக்குள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன நொந்து கொண்டார்.அந்த நேரத்தில் கிழக்கில் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தவே இடம்பெயர்ந்தமக்கள் மீளக்கூடியமர்த்தப்பட வேண்டும்என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.இப்போது வடக்கு – கிழக்கில் இருந்து நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும்பல இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் பொது வாக்கெடுப்புபோன்ற ஒன்றை – விஷப் பரீட்சையைநாமே கோரி அதில் இறங்குவது என்பதுநம்மை நாமே அழிப்பதற்கு ஒப்பானதாகும். ஆகவே, அத்தகைய திட்டத்துக்குத்
தமிழரசுக் கட்சி இடம் கொடுக்கக் கூடாது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதுதொடர்பில் அவசரப்படத் தேவையில்லை.
முதலில் பிரதான தென்னிலங்கைக்கட்சிகளின் வேட்பாளர்களின் தெளிவானநிலைப்பாடு அவர்களின் தேர்தல் விஞ்ஞாபன அடிப்படையில் வெளியான பின்னர், அவற்றைப் பரிசீலித்து சம்பந்தப்பட்டதரப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர்
நாம் ஒரு தீர்க்கமான தீர்மானத்தைஎடுக்கலாம். அதற்கு முன்னர் அவசரப்பட
தேவையில்லை. இதை என்னுடையசெய்தியாகத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் கூறுங்கள். இந்த விடயத்தை ஏற்கனவே மாவை சேனாதிராஜாவுக்கும் சிறீதரனுக்கும் நான் விளக்யுள்ளேன். மாவையுடன் திரும்பவும்பேசுவேன்.’ – என்று சம்பந்தர் குறிப்பிட்டிருக்கின்றார்.