எழிழன் மகள் எல்.எல்.பி பட்டம் பெற்றார் – காரைதீவு முன்னாள் தவிசாளர் நேரில் சென்று வாழ்த்து
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலன்மற்றும் வடக்கு மாகாண
சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் மகள் நல்விழி இலங்
கையில் எல்.எல்.பியாகபடிப்பை முடித்து அதற்கான பட்டமும் பெற்றுள்ளார். இவரை காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ்த் தேசிய பற்றாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.
எழிலன் எனப்படும் சசிதரன் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை
பொறுப்பாளராக இருந்தவர்என்பதுடன் .எழிலன் மனைவி அனந்தி சசிதரன் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு 2 ஆவது இடத்தையாழ்.மாவட்டத்தில் பெற்றுமாகாண சபை உறுப்பினராக பதவிவகித்திருந்தார்.
இராணுவத்திடம் சரணடைந்ததாக எழிலன் இறுதிக் கட்டப்
போரின் போது அவர் இராணுவத்திடம் சரணடைந்தார் என எழிலன்
மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்திருந்த போதும், இராணுவம்
அதனை மறுத்திருந்தது.
எனினும் எழிலன் தொடர்பில் அதன் பின்னர் எதுவித தகவல்களும்
வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது எழிலனின் மகள் நல்விழி எல்.எல்.பி.
பட்டம் பெற்றுக் கொண்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

