கொக்கட்டிச்சோலையில்; தமிழ் தேசி மக்கள் முன்னணியால் முள்ளிவாய்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்து வைப்பு
கனகராசா சரவணன்)
கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் வாரத்தை ஆரம்பித்து வைத்தனர்.
2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன படுகொலையையிட்டு மே 11ம் தொடக்கம் 18 ம் திகதிவரை கஞ்சிவாரம் என பிரகடனப்படுத்தப்பட்டது
இந்த பிரகடனத்தையடுத்து வருடாவரும் கஞ்சி வாரம் இடம்பெற்றுவருகின்ற நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தலைமையில் ஆரம்பித்து வைத்தனர்.
இதன் போது கடசியின் ஆதரவாளர்கள் மற்றும் அந்த பகுதியில் சிறுவர் தொடக்கம் பெரியவர்கள்வரை திரண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஆர்வத்துடன் வாங்கி குடித்தனர்.