கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக மீறல்களைக் கண்டித்தும் உரிய தீர்வினைப் பெற்றுத் தரக் கோரியும் பொது மக்களாலும் கல்முனை வடக்கு அனைத்து சிவில் சமூக அமைப்புகளினாலும் முன்னெடுத்துவரப்படும் போராட்டமானது இன்று இன்று (2024.05.06) 43 ஆவது நாளாக தொடர்கிறது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் சுழச்சி முறையில் தன்னார்வமாக தங்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டத்தில் பங்குபற்றி வருகின்றனர். தமிழ் அரசியல் தலைவர்கள் கருத்துக்கள் கூறியதுடக் களைத்துவிட்டார்களா எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


