இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சம்பளப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தனரணசிங்க அறிவித்துள்ளார்.


எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.