பாண்டிருப்பில் அப்பர் சுவாமிகள் குருபூசை

-.பிரபா-

கல்முனைப் பிராந்திய சிவ சங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தினர் ஆண்டுதொறும் நடாத்தி வரும் திருநாவுக்கரசு சுவாமிகள் குரு பூசை இன்று 03.05.2024 வெள்ளிக்கிழமை, சுவாமிகள் முத்தி பெற்ற சித்திரைச் சதய நன்னாளில் பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் அரசடியம்பாள் தேவஸ்தானத்தில் அப்பர் சுவாமிகள் பாடிய 4ஆம் 5ஆம் 6ஆம் திருமுறைகள் ஓதுதலுடன் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சுவாமிகளின் இப் புனித நிகழ்வில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்க இணைப்பாளர் சுவாமி வேதாந்த மகராஜ் அவர்களும், இந்து கலாசார திணைக்களம் சார்பில் கல்முனை வடக்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி சுஜித்திரா அவர்களும் ஆலய பரிபாலன சபை தலைவர் திரு. சண்முகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.