பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புதுவருட பூசை நிகழ்வுகள்.
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பொலிஸ் சமூக ஆலோசனை மத்திய குழு ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள சித்திரை புது வருட பூசை நிகழ்வு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் இன்று(14) இடம் பெற்றது.
பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே .எஸ் .கே. வீரசிங்க தலைமையில் நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கல்முனை உதவி பொலிஸ் அத்தியைச்சகர் (ஏ எஸ் பி) ஏ.சி புத்திக , பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை பொதுப்பதிகாரி அவர்களும், M.T.M நஜீம்,மற்றும் ரணதுங்க உதவி பொலிஸ் பரிசோதகர்கள், ஆகியோருடன் பெரிய நீலாவணை பொலிஸ் சமூக ஆலோசனை மத்திய குழு உறுப்பினர்களான செயலாளர் .A.கதிரமலை ,பொருளாளர் . என். சௌவியதாசன் மற்றும் முன்னாள் உப தலைவர் எம். தர்மலிங்கம் ஆகியோரோடு, மற்றும் பல உறுப்பினர்களும் பெரிய நீலவணை பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலரும், நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியநீலவணை பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களால் கைவிசேஷமும் வழங்கப்பட்டது.








