கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை எதிர்ததும் , கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் இன்று 20 ஆவது நாளாக மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

நாளை (14) ஞாயிற்றுக்கிழமை சித்திரை புதுவருட தினத்தை கல்முனை வடக்கு பிரதேச மக்கள் கறுப்பு சித்திரையாக அனுஷ்ட்டித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர். இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கல்முனை வடக்கு பிரதேச சிவில் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கறுப்புச் சித்திரை!*

*நாள் : 2024.04.14 ஞாயிறு

*நேரம் : காலை 10.00 மணி

*நிகழ்வுகள்

⭕ *நிகழ்வு-1*

காலை 10 மணிக்கு இளைஞர் கழகங்கள்,விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் மோட்டார் சைக்கிள்களின் பவனி.

⭕⭕ *நிகழ்வு-2*

கறுப்பு சித்திரை *பொங்கல் பொங்குதல்* : காலை 11 மணி

⭕⭕⭕ *நிகழ்வு-3*

பறை இசை போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.

அனைவரும் கலந்து கொண்டு நம் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.

*அனைத்து சிவில் சமூக அமைப்புகள்.*

*கல்முனை வடக்கு.*