மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியேற்பு!!
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் கடமைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய பணிப்பாளராக கடமையேற்றுள்ள வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் அவர்களை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.நவலோஜிதன் உள்ளிட்ட ட வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வரவேற்றதனைத் தொடர்ந்து அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக பதவியேற்றுள்ள நிலையில் குறித்த கடமைக்கு மேலதிகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைப் பொறுப்பினை இன்று ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வைத்தியசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். கல்முனை பிரதேச மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றவர்




