சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளையால் கற்றல் ஊக்குவிப்புப் பணி!
பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்துவரும் கல்முனையைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு) நாட்டில் பரவலாக பல்வேறு கல்வி ஊக்குவிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இன்று ( 09) பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் ச சதிஷ்குமார் தலைமையில் பெரியநீலாவணை பெடொ அமைப்பின் ஸ்தாபகர் சுபராஜன் ஆசிரியர் ஏற்பாட்டில் கற்றல் உபகரணகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.








