சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோதர் திரு தேவஅருள்.
பெரியநீலவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு (07) நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறந்த கல்வியும் ஒற்றுமையும் ஒழுக்கமும் எமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். விளையாட்டு என்பதும் எமது வாழ்வில் முககியம் பெறுகிறது உடல் உள ஆரோக்கியம் என்பவற்றுக்கு முக்கியமளிப்பதுடன் தற்போதைக காலத்தில் இளைஞர்கள் பொழுது போக்கை நல்ல முறையில் கடத்தவும் விளையாட்டும் அவசியம். பல்வேறு விளையாட்டுடன மாத்திரம் நின்று விடாது பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் நெக்ஸ் ரெப் அமைப்புக்கும் வாழ்த்துக்கள என்றார்
நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் தலைவர் .ந.சௌவியதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் . தேவஅருள், மற்றும் ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளரும் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் பிரதான தலைமை ஆலோசகரருமான கண. வரதராஜன், சமூக ஆர்வலர் . க. திருநாவுக்கரசு, நெக்ஸ்ட் ரெப் மகளிர் அணி தலைவி திருமதி மஞ்சுளா சுந்தரலிங்கம், நெஸ்ட்ஸ் ரெப் அமைப்பின் பொதுச் செயலாளர் ,வி. கார்த்திக், நெஸ்ட்ஸ் ரெப் அமைப்பின் பொருளாளர் கு. கஜேந்திரன், திரு சிறிதரன், மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர். நெஸ்ட் ரெப் இளைஞர்கள் 3 அணிகளாகப் பிரிந்து ,A2 Brothers, P2 Friends,YD kings, என்ற பெயரில் போட்டி நடைபெற்று இறுதியில் YD KINGS அணி வெற்றியீட்டியது.
நெக்ஸ் ரெப் சமூக அமைப்பு சமூகத்தில் கல்வி, கலை, கலாச்சாரம் ,விளையாட்டு, ஆன்மீகம், என பல்வேறுபட்ட செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.














