தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பிலான வழக்கானது நீடிக்க காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) முன்வைத்துள்ள ஆட்சேபனையே என ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா(K.v. Thavarasha) குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மாநாடு தொடர்பிலான வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்,
மேலும், ”குறித்த வழக்கை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவந்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
ஆனால் வழக்கின் எதிராளியான எம்.ஏ சுமந்திரன் முன்வைத்துள்ள ஆட்சேபனை காரணமாக வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
இது தனிப்பட்ட வழக்கு அல்ல. ஒரு சமூகம் சார்ந்த வழக்கு. ஆனால் சிலரின் செயற்பாட்டால் இன்று வழக்கு பிற்போடப்பட்டுள்ளது” என்றார்.