நூல் வெளியீடு.2024.04.06
சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான செல்லையா பேரின்பராசா எழுதிய. “பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 2024.04.06 பிற்பகல் 02.30 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சுவிஸ் உதயத்தின் கிழக்கு மாகாணத் தலைவருமான மு.விமலநாதனின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் தொழிலதிபரும் சுவிஸ் உதயத்தின் தாய்ச் சங்க பொருலாளருமான க.துரைநாயகம் பிரதம அதிதியாகவும் ,பொத்துவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி, தினகரன் நாளிதழ், தினகரன் வாரமலர் என்பவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியர் க.குணராசா ,கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் செ.கலையரசன், மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் கவிஞர் ப.மதிபாலசிங்கம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தினசபா சசி சர்மா, கல்முனை மெதடிஸ்த சேகர முகாமைக்குரு அருட்திரு.ரவி முருகுப்பிள்ளை ஆகியோர் ஆன்மீக அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் கண.வரதராஜனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் இந் நிகழ்வில் நூல் நயவுரையினை ஊடகவியலாளரும் கல்முனை கல்வி வலய தமிழ்பாட வளவாளருமான ஜெஸ்மி.எம். மூஸாவும் நன்றியுரையினை ஊடகவியலாளரும் ஆசிரியருமான சா.நடனபேசனும் நிகழ்த்துவர்.
இந் நிகழ்வை தேசிய கலைஞர் ஏ.ஓ.அனல் ஆசிரியர் தி.கோகுலராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர். மேலும் பழைய திரைப்பட பாடல்களை பாவாணர் அக்கரைப்பாக்கியன் தனது குரலில் பாடுவார்.
இந் நூலின் முதற் பிரதியை க.துரைநாயகமும் இரண்டாம் பிரதியினை சுவிஸ் உதயத்தின் தாய்ச் சங்கத் தலைவர்டி.எல்.சுதர்ஷனும் பெற்றுக் கொள்வர்.கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவிகளின் நடனமும் இடம்பெறவுள்மை குறிப்பிடத்தக்கது.