பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை (நாப்கின்) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் சித்திரை புத்தாண்டின்பின்னர் பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளை சேர்ந்த சுமார்8 இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரஅணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.


இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும்
எனவும், இந்த திட்டத்துக்காக 100 கோடி ரூபாயை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்
துள்ளார்.