கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சர்வதேச வன தின நிகழ்வு – 2024*
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சர்வதேச வன தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.03.21 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின்; பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. இரா. முரளீஸ்வரன் அவர்களின் தலைமையிலும்;, வைத்தியசாலை திட்டமிடல் பிரிவினரின் ஏற்பாட்டிலும் மற்றும் தரமுகாமைத்துவ பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திரு.ப.செல்வகுமார் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட வன அலுவலர் திரு.R. M.விஜயபால, அம்பாறை மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் திரு.S.உதயராஜன், விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட உதவி வன அலுவலர் திரு.கலாநிதி.M. A.ஜாயா, அம்பாறை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவு பிரதிப்பணிப்பாளர் திரு.H. B.அனீஸ், கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.T. J.அதிசயராஜ், கல்முனை வடக்கு வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி Dr.N.ரமேஸ், கல்முனை பிரதேச சுற்றாடல் சபை அதிகாரி திருமதி. P. செவ்வேற்குமரன், அக்கரைப்பற்று வன வள பாதுகாப்பு அதிகாரிகளான திரு. S. M. சபிக் மற்றும் திரு.A. தியாகராஜா, கல்முனை கடற்படைத்தள கட்டளைத்தளபதி திரு.தம்மிக்க எக்கனாயக்க போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வானது தொடர்ந்து கல்முனை “வடக்கு ஆதார வைத்தியசாலையின் பசுமைப் புரட்சியை நோக்கிய பயணம்” தொனிப்பொருளுக்கான இலட்சினையானது திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து மர நடுகை நிகழ்வும் நடைபெற்றது. மேலும் “புதிய வரவும் புதிய மரமும்” எனும் தொனிப்பொருளின் ஊடாக வைத்தியசாலையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மரக்கன்று வழங்கப்படும். அதன் முதற்கட்டமாக மகப்பேற்று விடுதியில் அன்றைய தினம் பிறந்த 8 குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மேலும் பணிப்பாளரினால் வரவேற்புரையும் தலைமையுரையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களினால் வரவேற்பு நடனம் மற்றும் காடுகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் ஆகிய நிகழ்வுகள் அரங்கேற்றபட்டன.
மேலும் மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டடு கௌரவிப்பும் இடம்பெற்றது.
தொடர்ந்து அம்பாறை மாவட்ட உதவி வன அலுவலர் திரு. கலாநிதி M. A. ஜாயா அவர்களின் வன பாதுகாப்பு சம்மந்தமான உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து அம்பாறை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவு பிரதிபணிப்பாளர் திரு. H. B. அனீஸ் அவர்கள் உரையாற்றினார். அவர் மரங்களின் முக்கியத்துவம் மற்றும் சூழல் பாதுகாப்பு சம்மந்தமான விடயங்களை பகிர்ந்து உரையாற்றினார். தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட வன அலுவலர் திரு. R. M. விஜயபால அவர்களின் உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து பிரதம அதிதிகளான அம்பாறை மாவட்ட வன அலுவலர் திரு.R. M.விஜயபால, அம்பாறை மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் திரு.S.உதயராஜன் ஆகியோருக்கு வைத்தியசாலையின் பணிப்பாளரினால் மரக்கன்று வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கும் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன . மேலும் இறுதி நிகழ்வாக நன்றியுரையினை வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் Dr. J. மதன் அவர்களினால் வழங்கப்பட்டு குழுப் புகைப்படம் எடுத்தலுடன் நிகழ்வு நிறைவுற்றது. நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், விடுதி பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், கணக்காளர், தாதிய பரிபாலகர், பரிபாலகி, நிர்வாக உத்தியோகத்தர், அனைத்து பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலையின் நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்வினை தமிழில் மொழியில் சுகாதார கல்வி பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. N.மனோஜினி மற்றும் சிங்கள மொழியில் பேச்சு மற்றும் மொழி சிகிச்சை பிரிவின் பொறுப்பு உத்தியோகத்தர் செல்வி.Y. M. U. T. யாபா அவர்களும் தொகுத்து வழங்கியிருந்தனர்.