கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முப்பெருவிழா : மேலங்கி அறிமுகம்
(நூருல் ஹுதா உமர்)
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் முப்பெரு விழா கல்வி அலுவலக கல்விசார் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.றாஸிக் தலைமையில் நடைபெற்றது.
ஓய்வு பெற்றுச் செல்லும் கல்முனை தமிழ் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, ஆசிரிய ஆலோசகர் வை.ஏ.கே.தாஸிம் ஆகியோருக்கான பணி நயப்பு , கல்முனை கல்வி வலயத்திற்கான அடையாள அட்டை விநியோகம், கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான மேலங்கி வெளியீடு ஆகிய மூன்று நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபிர், ஜிஹானா ஆலிப், ஆசிரிய ஆலோசகர் திருமதி நஜிமுன்நிஸா ஆகியோர் சிறப்புரையாற்றினர்
பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள்,வளவாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
ஆசிரிய ஆலோசகர் கே.சாந்தக்குமார் நிகழ்வை நெறிப்படுத்தினார். நன்றியுரையினை தமிழ்ப்பாட ஆசிரிய வளவாளர் ஜெஸ்மி மூஸா நிகழ்த்தினார்.