அறநெறிக்கல்வியை ஊக்கப்படுத்தும் ஆன்மீக செயற்பாடுகள் முன்னெடுப்பு!


பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு, மட்டக்களப்பு சிவதொண்டர் திருக்கூடம் ஆகியவை இணைந்து, அம்பாறை மாவட்டத்தில் அறநெறி கல்வியை ஊக்கப்படுத்தும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளன. அதன் ஒரு கட்டமாக இன்று கல்முனை மணல் சேனை கிராமத்தில் பாலமுருகன் அறநெறி பாடசாலையில் அறநெறி கல்வி ஆன்மீக செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

“தமிழைப் போற்றி சைவம் வளர்ப்போம்” என்ற தொனிபொருளிலான இந்தச் செயற்பாட்டில் ஆன்மீக ஊர்வலம் .
விசேட பூசை நிகழ்வுகள். ஆன்மீக தியான நிகழ்வு. அறநெறி கல்வி பற்றிய போதனைகள். சிவசின்னமான உருத்திராட்சம் அணிவித்தல்.
சமய வினா விடை போட்டிகள்.
பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கல், உட்பட பல்வேறு நிகழ்வுகள் முன்னடுக்கப்பட்டன .

நிகழ்வில் நெக்ஸ்ட் ரெப் அமைப்போடு இணைந்து கொண்ட ஆன்மீக தியான குருஜி என். தேவநேசன். ஒய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர், கண. வரதராஜன், உதவிக்கல்வி பணிபாளர் எம். லக்குணம் ஆகியோர் ஆன்மீக அறநெறிக்கல்வி ஊக்கப்படுத்தல் வளவாளர்களாக நிகழ்வுகளை முன்னெடுத்தனர். தொடர்ந்து பணிகள் முன்னெடுக்க வாழ்த்துக்கள்