(பெரியநீலாவணை பிரபா.)


பெரிய நீலாவணை கமு/விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற வித்யா ஆரம்ப விழா 2024 .


நாடளாவிய ரீதியில் (22 ஆம் திகதி தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வான “வித்தியாரம்ப விழா” பல்வேறு பாடசாலைகளிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

அந்த வகையில் கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பாடசாலை அதிபர் S. சதீஷ்குமார் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அதிபர் சிவமணி நற்குண சிங்கம் அவர்களும், சிறப்பு அதிதியாக முன்னாள் அதிபர் அமரர் வேதநாயகம் அவர்களின் துணைவியார் ஊர்மிலா ஆசிரியை அவர்களும் கலந்து கொண்டனர் .
மேலும் விசேட அதிதிகளாக கிராமத்தின் பல்வேறு ஆலய பரிபாலன சபை நிர்வாக உறுப்பினர்களும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும், கலந்து கொண்டனர்.
நிகழ்வின் கமு/விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 22 மாணவர்கள் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும் கடந்த காலங்களில் கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்ததோடு ஆசிரியராகவும் இருந்து கடமையாற்றிய திருமதி சிவமணி நற்குணசிங்கம் அவர்களும், திருமதி ஊர்மிளா வேதநாயகம் ஆசிரியை அவர்களும் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
தரம் ஒன்று மாணவர்கள் அனைவருக்கும் பெரிய நிலாவனை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு,மற்றும் நெக்ஸ் ரெப் இளைஞர் கழக உறுப்பினர்களால் புத்தக பைகளும், சில கற்றல் உபகரணங்களும் விசேடமாக வழங்கி வைக்கப்பட்டன . நிகழ்வில் பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.