ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி கொழும்பில்.
(கலைஞர்.ஏ.ஓ.அனல்)
ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான மூன்று சர்வதேச கண்காட்சி இம்மாதம் 29ஆம் திகதியும் மார்ச் மாதம் 1,2ஆம் திகதிகளில் கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள Sri Lanka Exhibition & Convention Centre மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்காவின் செம்ஸ் குளோபல் நிறுவனத்தினர் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இயந்திரம் மற்றும் ஆடைத் தொழில்நுட்பம், ஜவுளித் துறையின் 11ஆவது டெக்டெக் இலங்கை 2024 சர்வதேச கண்காட்சி, உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் நூல், துணி, ட்ரிம்ஸ் தொடர்பான 2024ஆம் ஆண்டின் 13ஆவது கொழும்பு சர்வதேச கண்காட்சி உட்பட சாயம், இரசாயனம் 2024 சர்வதேச கண்காட்சி ஆகிய மூன்று வகையான கண்காட்சிகள் ஒரே மேடையில் நடைபெற உள்ளதுடன் சர்வதேச மற்றும் உள்ளுர் வர்த்தகத்துறையினர் கைத்தொழிலாளர்களின் பங்களிப்புடன் நடைபெற உள்ளன.
ஜவுளித்துறையில் பிரதான வகிபாகத்தை கொண்டுள்ள செம்ஸ் குளோபல் பி2பி வர்த்தக கண்காட்சி நிறுவனமானது உலகளாவிய ரீதியில் நான்கு கண்டங்களில் கண்காட்சி மாநாடுகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக பங்காளதேஷ், பிரேசில், மொரோக்கோ, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சர்வதேச ரீதியாக உற்பத்தி செய்யப்படும் நவீன கருவிகளை அறிமுகப்படுத்தி ஆடைக் கைத்தொழில் துறையையும் ஜவுளித் துறையையும் மேலும் வளப்படுத்தி சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதே இக் கண்காட்சியின் நோக்கமாகும்.
இலங்கையின் ஆடைக்கைத்தொழில் துறை மற்றும் ஜவுளி நகைகள் உற்பத்தி ஆகியன சர்வதேச ரீதியில் போட்டியிடும் அளவுக்கு உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் கைத் தொழிலாளர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளை அடையாளம் காணக்கூடியதாக முடியும். அவ்வாறே, இலங்கையின் பொருளாதாரத்துக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான சந்தர்ப்பமாகவும் இருக்கும். அதுமாத்திரமன்றி இக்கண்காட்சியானது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கும் நல்லதொரு வாய்ப்பாகும் அமையும்.
2024 டெக்டெக் இலங்கை வர்த்தக கண்காட்சியானது 11ஆவது தடவையாக நடைபெறுகிறது. தொழில்நுட்பம் மற்றும் ஆடைத் தொழில் இயந்திரம் மற்றும் ஜவுளி ஆகியவற்றின் முன்னணி சந்தைப்படுத்தல் தளமாக இக்கண்காட்சி நடைபெற உள்ளது. சர்வதேச ரீதியாக செயற்படும் முன்னணி நிறுவனங்களின் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், வியாபாரிகள் பங்குபற்றும் இந்நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்பங்களை இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கு சமாந்தரமாக, நூல், துணி மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய பொருட்களை 2024 கொழும்பு நூல் மற்றும் துணி கண்காட்சி நடைபெற உள்ளது. இயற்கை மற்றும் செயற்கையான கலவைகள் மூலம் தயாரிக்கப்பட்ட நவீன ஜவுளி மற்றும் கைத்தரி ஜவுளிகள், பல்வேறு வகையான அலங்கார, பெஷன் உற்பத்திகளை பார்வையிட இக்கண்காட்சியில் பார்வையிட முடியும். இவை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினால்; தயாரிக்கப்பட்ட உற்பத்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
43ஆவது தடவையாக நடைபெறும் இக்கண்காட்சியானது சாயம் மற்றும் இரசாயனம் 2024 தொனிப்பொருளில் சாயம், இரசாயனம் கண்காட்சியாகும். ஜவுளி நகைகள் மற்றும் ஆடைக் கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய முகவர்களின் பங்களிப்புடன் இக்கண்காட்சி நடைபெறும். மிகவும் அவதானமாக செயற்பட்டு வரும் இந்த தொழிலானது சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு, சுகாதாரத்துறைக்கு பங்கம் ஏற்படாத வகையில் நவீன நுட்பங்களை கையாண்டு இக்கைத் தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான நுட்பங்களை பொதுமக்கள் மற்றும் வர்த்தகத் துறையினருக்கு காட்சிப்படுத்துவதும் அறிமுகப்படுத்துவதும் இக்கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.
நிலையான மற்றும் நவீன நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில் சர்வதேச மற்றும் உள்ளுர் வர்த்தக கைத்தொமிலாளர்களுடன் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சியானது உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் நவீன நுட்பங்களின் ஊடாக செயற்திறனான உற்பத்திக்கு வழியேற்பட்டுள்ளது என செம்ஸ் குளோபல் வர்த்தக கண்காட்சியின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எஸ். சர்வார் குறிப்பிட்டார்.
உள்நாட்டு ஆடைக் கைத்தொழிலாளர்கள், ஜவுளி நகை உரிமையாளர்கள், பங்காளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிட முடியுமென தெரிவித்த அவர், சர்வதேச ரீதியாக உற்பத்தி செய்யப்படும் அதிநவீன உற்பத்திகளை இக்கண்காட்சியில் பார்வையிட முடியும் என்றார்.