இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்!

(கலைஞர்.ஏஓ.அனல்)

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியவர்கள், வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துள்ள இந்த மாணவர்கள் அரசாங்க வேலை கிடைப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்களது ஆவணங்களை Offer அமைப்பின் உதவியுடன் ஒழுங்குபடுத்த ஆலோசனைகளை ஆளுநர் வழங்கியுள்ளதுடன், திருப்பி அனுப்பப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தலா 50000ரூபா ஒதுக்கீடும் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார்.