கிழக்கு மாகாண ஆளுநரால் 55 பாடசாலைகளுக்கு சிமாட் வோட் (Smart Board) வழங்கிவைப்பு.

(கலைஞர்.ஏ.ஓ.அனல்)

கிழக்கு மாகாண
ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் Brandix நிறுவனத்தால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கும் நிகழ்வு ஆளுனர் அலுவலகத்தில் இன்று(19) நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 55 பாடசாலைகளுக்கும் smart board வழங்கி வைக்கப்பட்டது.

Brandix ஆடைத் தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் கிராமப்புற பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.