அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்!
இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!
பா. அரியநேந்திரன் தமிழன் ஞாயிறு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை
நன்றி -தமிழன்
அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்!
இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!
தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை உத்தரவுகளால் 75, வருட பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான தந்தைசெல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 17, வது தேசிய மகாநாடு நாளை 19/02/2024, திங்கள் கிழமை நடைபெற இருந்த வேளையில் கடந்த 15/02/2024, அன்று ஒரே நாளில் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளால் பல இழுபறிகள் போட்டிகள் பொறாமைகள் மத்தியில் இடம்பெற இருந்தமாநாடு இப்போது நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
ஏற்கனவே 16, தேசிய மகாநாடுகள் எல்லாமே சிலு சிலுப்புகள் அணிகள் இன்றி இடம்பெற்றன. இதுவரை எட்டுத்தலைவர்களால் 74, வருடங்கள் கட்டிக்காத்த சமஷ்டிக்கொள்கையை வெளிப்படையாக கொண்ட தமிழ்தேசிய மரபு சார்ந்த கட்சி இம்முறைதான் 17, வது தேசிய மகாநாடு புதிய நிர்வாக தெரிவுகளில் போட்டி பொறாமை சண்டை எதிர்ப்பு விட்டுக்கொடுப்பின்மை என பல தடைகளை்தாண்டி புதிய 9, வது தலைவராக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முதல்தடவையாக ஒரு தேர்தல் வாக்கெடுப்பு மூலமாக தெரிவானார்.
இதுவரை கட்சித்தலைவர்களாக
- சாமுவேல் ஜேம்ஷ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (தந்தை செல்வா) யாழ்ப்பாணம்
- குமாரசாமி வன்னியசிங்கம்,யாழ்ப்பாணம்.
- அராலிங்கம் இராஜவோதயம்,-திருகோணமலை.
- சின்னமுத்து மூத்ததம்பி இராசமாணிக்கம், மட்டக்களப்பு.
- டாக்டர் இலங்கை முருகேசு விஜயரெத்தினம் நாகநாதன்,யாழ்ப்பாணம்.
- அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். யாழ்ப்பாணம்.,
- இராஜவரோதயம் சம்பந்தன். திருகோணமலை.
- மாவை சோமசுந்தரம் சேனாதிராசா. யாழ்ப்பாணம்.
ஆகியோர் இருந்தனர் தற்போது
9.சிவஞானம் சிறிதரன் யாழ்ப்பாணம். தெரிவாகினார்.
சரித்திரத்தில் கடந்த 74 வருடமும் இடம்பெறாத நிலையில் தலைவர் தெரிவுக்காக பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த மருத்துவர் சத்தியலிங்கம் வேட்பு மனுக்களை கோரியதன் நிமிர்த்தம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் பொதுச்சபையின் ஆறு இயங்கு நிலை உறுப்பினர்களின் முன்மொழிவுடன் விண்ணப்பங்களை பதில் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டு அவர்களை வடகிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் சென்று பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தார்.
ஏறக்குறைய 375, பொதுச்சபை உறுப்பினர்கள் மட்டும் தலைவரை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பில் ஏன் மாவட்டங்களில் எல்லாம் சென்று பிரசாரம் செய்யவேண்டும் என்ற கேள்வி பலரின் மத்தியில் இருந்தது.
அதற்கு ஜனநாயகம் உள்ள ஒரு அரசியல் கட்சியில் ஜனநாயகமுறையில் வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வது ஏனைய கட்சிகளுக்கு முன்மாதிரியான செயல்பாடு என வியாக்கியானம் தலைவர் தெரிவில் போட்டியிட்ட வேட்பாளர்களால் கூறப்பட்டன
அதேவேளை இவ்வாறான போட்டித்தன்மை பின்னர் பொறாமையாக மாறி இரண்டு அணிகளாக கட்சிக்குள் குழப்பங்களை தோற்றுவிக்கலாம் என்ற கருத்துகளை பல ஊடகவியலாளர்களும் கட்டுரையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தனர்
இந்த சந்தேகங்களுக்கெல்லாம் வேட்பாளராக போட்டியிட்ட சுமந்திரன் அப்படி எதுவும் இடம்பெறாது தேர்தல் முடிவுற்றதும் இருவரும் சேர்ந்து பயனிப்போம் என்பதை வெளிப்படையாக கூறினார். ஆனால் அவரே பின்னர் பொதுச்செயலாளர் பதவி தமக்கு தரப்படவேண்டும் இல்லையேல் தமது அணிக்கு தரவேண்டும் என்று அடம்பிடித்து இரண்டு அணிகளாக தமிழ்சுக்கட்சி உள்ளதை நிருபித்தார்.
ஏற்கனவே வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் தமது பிரசாரத்தை ஆரம்பித்தவர் சுமந்திரன், அவருக்கு ஆதரவாக வெளிப்படையாகவே மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முழுமையாக செயல்பட்டார் அவரின் பிரசாரம் ஆரம்பித்து ஒரு வாரங்களுக்கு பின்னரே இரண்டாவதாக சிறிதரன் மூன்றாவதாக யோகேஷ்வரன் சிறிதரனுடன் இணைந்து பிரசாரத்தை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்டன்ர்.
சிறிதரனுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாலாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், யோகேஷ்வரன். அம்பாறைமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன் முழுமையாக பிரசாரங்களை மேற்கொண்டனர்.
யோகேஷ்வரன் சிறிதரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோதும் கடந்த ஜனவரி 21,ல் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வாக்குச்சீட்டில் யோகேஷ்வரனின் பெயரும் இடம்பெற்றிருந்தது இதில் ஆச்சரியம் என்னவெனில் யோகேஷ்வனுக்கு எவருமே வாக்களிக்கவில்லை தப்பித்தவறி்யாராவது ஒவருவர் யோகேஷ்வரனன் பெயருக்கு நேரே புள்ளடி இட்டு இருந்தால் அவர் மீது வீண் சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கும் தாம் சிறிதரனை ஆதரிப்பதாக கூறிவிட்டு தானே தமது வாக்கை அவருக்கே போட்டிருப்பதாக அவர் மீது யாரும் குற்றம் கூறியிருப்பார்கள் நல்லவேளை்அப்படி நடக்கவவில்லை.
இதில் இருந்து யோகேஷ்வரன் சிறிதரனை தாம் ஆதரிப்பதாக கூறிய கருத்து முழுமை பெற்றிருந்தது என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இல்லை.
வாக்கெடுப்பில் பொதுச்சபையில் கலந்துகொண்ட 321, உறுப்பினர்களில் சிறிதரன் 184, வாக்குகளையும், சுமந்திரன் 137, வாக்குகளையும் பெற்று சுமந்திரனை விட 47, மேலதிக வாக்குகளால் சிறிதரன் தெரிவானார். சிறிதரன் தமது பிரசாரங்களில் தாம் கூறிய தமிழ்த்தேசிய வாதி என்பதை நிருபித்தார் பொதுச்சபை உறுப்பினர்களில் 184, பேர் தமிழ்தேசிய கொள்கையை ஆதரித்தனர் எனபதும் 137 பேர் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள் என்ற தோற்றப்பாட்டையும் இந்த வாக்கெடுப்பு தெரிவு மூலம் நிருபணமானது.
ஒருகட்சி தலைவர் தெரிவை மாவட்டங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்யாமல் தலைவர் தெரிவு இடம்பெற்ற ஜனவரி 21, ல் குறிப்பிட்ட மூவரையும் ஒரு ஐந்து ஐந்து நிமிடங்களுக்கு அவர்களின் கருத்துக்களை கூறவிட்டு பின்னர் வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இ்ண்டு அணிகள் என்ற கருத்துக்கே இடம்வந்திராது என்பது எனது கருத்து இதை நான் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருந்தேன்.
அதைவிட தலைவர் தெரிவு இடம்பெற்ற அன்றே பொதுச்செயலாளர் தெரிவும் இடம்பெற்றிருந்தால் இரண்டு அணிகள் என்ற கதையே எழுந்திராது.
வழமையாக கடந்த 16, தேசிய மகாநாடுகளிலும் தெரிவு ஒருநாளில்த்தான் இடம்பெற்றது வழமை ஆனால் இந்த முறைமான் ஜனவரி 21,ல் தலைவர் தெரிவும் சரியாக ஒருவாரம் கழித்து ஜனவரி 27,ல் பொதுச்செயலாளர் ஏனைய தெரிவுகளுக்கு பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் திகதி ஒதுக்கியதும் ஒரு தவறான அணுகுமுறையாக பார்க்கப்பட்டது் இதுவும் சுமந்திரன் பதில் பொதுச்செயலாளரிடமும், நிர்வாகச்செயலாளரிடமும் கூறியதால் அப்படி செய்ததாக பலரின் மத்தியில் கருத்தும் உண்டு ஒரே நாளில் இடம்பெறாமல் ஒருவாரம் பிற்போடப்பட்டு பொதுச்செயலாளர் தெரிவு இடம்பெற்றதும் குழப்பநிலைக்கு ஒரு காரணமாக அமைந்தது.
அந்த குழப்பம் போட்டி குரோதம் இன்று வெட்கம் இல்லாமல் நீதிமன்றத்தடைக்கு சென்றுள்ளது.
கடந்த ஜனவரி 27,ல் பொதுச்சபை கூடுவதற்கு் முன்னம் மத்தியகுழு கூட்டப்பட்டது மத்திய குழுக்கூட்டம் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தால் அறிவிப்பு(கூட்ட அழைப்பு) விடுக்கப்படவில்லை மகாநாட்டு விழாக்குழு தலைவர் குகதாசனே மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்
உண்மையில் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் சுகவீன காரணமாக அவர் தலைவர் தெரிவிலும் அதன்பின்னர் நடந்த மத்தியகுழு பொதுச்சபை கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை இதுவும் சில முரண்பாடுகளுகளை தோற்றுவித்தது மகாநாடு நடத்தி முடியும்வரை அதற்கான முழும்பொறும் பொதுச்செயலாளரே கையாளவேண்டும் ஆனால் இது யார் கூட்டத்தை நடத்தினார் என்பதே புரியாத புதிராகவே இருந்தது.
இறுதியாக கடந்த ஜனவரி 27, ல் இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்திம் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றபோது அவர் மத்தியகுழுவில் பொதுச்செயலாளர் தொடர்பான ஆலோசனைகளை கூறலாம் என கேட்டதற்கு இணங்க நான்(பா.அரியநேத்திரன்) மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசனின் பெயரை முன்மொழிந்திருந்தேன்.
அதன்பின்னர் ஏற்கனவே நிருவாக செயலாளராக இருந்த குலநாயகம் தான் 1965, தொடக்கம் தமிழரசுகட்சியில் முக்கிய உறுப்பினராக இருப்பதாகவும் கடந்த 2019, மகாநாட்டிலும் தாம் பொதுச்செயலாளர் பதவி கேட்டு தரப்படவில்லை இந்தமுறை தமக்கு தரவேண்டும் என குறிப்பிட்டார்.
அதன்பின்னர் சுமந்திரன் தம்மை தலைவர் சிறிதரன் சிரேஷ்ட தலைவராக செயல்படுமாறு கேட்டதாகவும் தாம் அந்த பதவியை ஏற்கவில்லை ஆனால் தற்போது இரண்டு அணிகள் உள்ளன சிறிதரன் அணி , சுமந்திரன் அணி என உள்ளது தலைவராக சிறிதரன் உள்ளதால் அவருக்கு எதிராக போட்டியிட்ட தமக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கினால் இரண்டு அணிகளையும் சமாளித்து ஒற்றுமையாக கட்சியை முன்னகர்த்தலாம் என்ற கருத்தை தெரிவித்தார்.
அடுத்ததாக கொழும்பு கிளை உறுப்பினர் இரத்தினவேல் தமது கருத்தில் வடக்கை சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்தால் கிழக்கை சேர்ந்தவர் பொதுச்செயலாளராக இருப்பது நல்லது அதனால் குலநாயகமும், சுமந்திரனும் வடக்கை சேர்ந்தவர்களல விட்டுக்கொடுத்து மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை பொதுச்செயலாளராக தெரிவது நல்லது என்ற கருத்தை கூறினார்.
இதன் பின்னர் மீண்டும் சுமந்திரன் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் உள்ளன அதில் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன். அல்லது மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், அல்லது அம்பாறை மாவட்ட தலைவர் கலையரசன் இந்த மூவரில் ஒருவரை நியமித்தால் இரண்டு அணிகள் என்ற பிரச்சனை எழாது என்ற கருத்தை கூறினார்.
இதன்பின்னரே புதியதலைவர் சிறிதரன் ஶ்ரீநேசனிடம் அவருடைய இருக்கைக்கு சென்று குகதாசனுக்கு ஒருவருடம் விட்டுக்கொடுக்குமாறு கேட்டார் அதை பெரும் தன்மையாக ஶ்ரீநேசனும் சம்மதித்தார்
ஆனால் ஒருவருடம் வரையறை செய்த விடயத்தை பொதுச்சபையில் சிறிதரன் கூறவில்லை.
பொதுச்சபையில் பெரும்பாலானவர்கள் குகதாசனை பொதுச்செயலாளராக வருவதை விரும்பவில்லை இதனால் சண்டை தகராறு குய குழப்பம் அடைந்து பின்னர் இரகசியவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கேட்டபோது ஒருகட்டத்தில் பழைய தலைவர் மாவை சேனாதிராசா வாக்கெடுப்பு மறுநாள் நாளை 28, ம் திகதி இடம்பெறும் என அறிவித்தார் அதனால் சில பொதுச்சபை உறுப்பினர்கள் வெளியேறினர் எஞ்சிய பல உறுப்பினர்கள் இன்று வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என அடம்பிடித்தனர்.
இதனை ஏற்ற தலைவர் மாவை சேனாதிராசா இப்போது பொதுச்செயலாளருக்கான இரகசிய வாக்கெடுப்பை பதில் செயலாளர் இல்லாத காரணத்தால் உப செயலாளரான சுமந்திரன் நடத்துவார் என கூறினார்.
சுமந்திரன் பொதுச்செயலாளருக்கான வாக்கெடுப்பை தவிர்த்து மத்தியகுழுவில் எடுத்த தீர்மானத்தை ஏற்பவர், எதிர்பவர்கள் என கூறி கையை உயர்த்தும் வாக்கைடுப்பை நடத்தி மேடையில் நின்று அவரே கணக்கெடுத்தார் அந்த எண்ணிக்கை 112, பேர் ஏற்பதாகவும்,104, பேர் எதிர்கதாகவும் முடிவை அறிவித்துவிட்டு சென்றார்
அதன்பின்னர் மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட தலைவர் மாவைசேனாதிராசா மகாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக கூறினார்.
இந்த சிக்கல் நிலை கடந்த ஜனவரி 27, தொடக்கம் கடந்த பெப்ரவரி 11, வரை தொடர்தன மீண்டும் பொதுச்செயலளர் பதவி இரகசிய வாக்கெடுப்பில் நடத்தவேண்டும் என சிறிதரன் அணியை சேர்ந்தவர்களும், நடத்த கூடாது என சுமந்திரன் அணியை சேர்ந்தவர்களும் வாதப்பிரதிவாதங்களும் சமூகவலைத்தளங்களில் ஏட்டிக்கு போட்டியான கருத்துகளும் தொடர்ந்தன.
புதியதலைவராக தெரிவான சிறிதரன் தமது தலைவர் பதவியை முறைப்படி மகாநாட்டில் பதவி ஏற்று கட்சியை இயங்கு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளதாலும் பழைமையான தமிழரசுக்கட்சியை தொடர்ந்தும் ஒற்றுமையாக முன்கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவும் கடந்த 11/02/2024, ம் திகதி வவுனியாவில் பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த சத்தியலிங்த்தின் வீட்டில் மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், அம்பாறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன், திருகோணமலை மாவட்ட தலைவர் ச.குகதாசன், மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாளஷ் நிர்மலநாதன், வவுனியா மாவட்ட தலைரும் பதில் பொதுச்செயலாளருமான சத்தியலிங்கம், புதிய தலைவர் சி.சிறிதரன் ஆகிய ஏழுபேரும் பல மணிநேரம் கலந்துரையாடி வாதப்பிரதி வாதங்களின் பின்னர் ஒரு இணக்கபபாடு எட்டப்பட்டது. இந்த இணக்கப்பாட்டு அடிப்படையிலேயே நாளை 19, ம் திகதி மாநாடு இடம்பெற இருந்தது
அந்த இணக்கப்பாடானது முதல் ஒருவருடம் திருகோணமலை ச.குகதாசனும், மறு வருடம் மட்டக்களப்பு ஞா.ஶ்ரீநேசனும் பொதுச்செயலாளராக பணிபுரியவது என இணக்கம் காணப்பட்டது.
இந்த இணக்கத்தின் அடிப்படையில்தான் கடந்த ஜனவரி 27,ம் திகதி ஒத்திவைக்கப்பட்ட 17, வது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மகாநாடு நாளை (19/02/2024) மீண்டும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடந்த 15ம் திகதி சிறிதரனுக்கு எதிரான அணியை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இரண்டு மாவட்டங்களில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றமை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் அதற்கு துணைபோனவர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறுவதை காணலாம்.
தந்தை செல்வா 1949, ல் தமிழரசுகட்சியை ஆரம்பித்து
அவருடைய வழியை தொடர்ந்து பின்னர் தலைவராக செய்பட்ட ஏனைய தலைவர்களான கு.வன்னியசிங்கம், அ.இராஜவோதயம்
சி.மூ.இராசமாணிக்கம்,
இ வ நாகநாதன்,அ.அமிர்தலிங்கம்.
இரா சம்பந்தன்,மாவை சேனாதிராசா. ஆகியோரும் கட்சி உபவிதிகளுக்கு அப்பால் சில விடயங்களை கட்சி நலன் கருதி சம்பிரதாயம். விட்டுக்கொடுப்பு, சமூகநலன், பிரதேசநலன். என்பவற்றை அனுசரித்து தமிழரசுக்கட்சியை பாகுபாடின்றி ஒற்றுமையாக கடந்த 74, வருடங்கள் ஒரு தமிழ்தேசிய விடுதலை அரசியல் கட்சியாக தமிழ் மக்கள்மத்தியில் பிழவு படாமல் கட்டிக்காத்தனர். அவர்கள் தலைவர்களாக இருந்த வேளையில் நீதிமன்றம் தடை சட்டம் என எவருமே கட்சியை மீறி செல்லவில்லை.
ஆனால் கட்ந்த 21/01/2024, ல் வாக்கெடுப்பு மூலமாக புதிதாக தற்போது தெரிவான தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவாகி அடுத்த கட்ட நடவடிக்கையை ஒற்றுமையாக முன்எடுக்கும் ஆயத்தங்களை இணக்கப்பாடுடன் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்போது அதனை பொறுத்துக்கொள்ளாத சக்திகள் பொறாமையினால் தடை உத்தரவை பெற்றனர்.
தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனமானது கடந்த 1976, மே,14,ல் வட்டுக்கோட்டை தீர்மானம் எடுக்கும்போது அவர் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை கலைத்துவிட்டு அல்லது செயல் இழக்க வைத்துவிட்டு தமிழர் விடுதலை கூட்டணியை் ஆரம்பிக்கவில்லை தமிழரசுக்கட்சியை அப்படியே வைத்துவிட்டே தனியாக அடுத்த கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியை உதயசூரியன் சின்னத்துடன் உருவாக்கப்பட்டு முதல் முதலாக 1977, பொதுத்தேர்தலை சந்தித்து பின்னர் 2000, ம் ஆண்டுவரை அந்த கட்சி தனித்துவமாக்செயல்பட்டது மட்டுமின்றி பல தேர்தலகளை சந்தித்தது அதனால்தான் 2001, ல் தமிழ்ததேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் ஆதரவுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது தமிழர் விடுதலை கூட்டணிதான் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கட்சியாக இருந்தது.2001 தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலாவது தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்டது.
ஆனால் அதன்பின்னர் ஆனந்தசங்கரியின் துரோகத்தால் 2004, ல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலை கூட்டனணியில் தேர்தல் கேட்க முடியாமல் ஆனந்தசங்கரியார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றதனால் 2004, பொதுத்தேர்தலில் மீண்டும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் தேர்தலை சந்திக்குமாறு விடுதலைப்புலிகளின் தலைவர் கட்டளை இட்டு இன்றுவரை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தமிழினத்தின் தாய்க்கட்சியாக செயல்படுகிறது.
2004, ல் ஆனந்தசங்கரி செய்த துரோகத்தை இப்போது 2024, ல் தமிழரசுக்கட்சியில் உள்ள கறுப்பாடு ஒன்றின் ஆலோசனையில் செய்யப்பட்டுள்ளது. அந்த கறுப்பாடு யார் என்பது கட்சி உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும் அதை நான் குறிப்பிடவில்லை தயாரிப்பு, இயக்கம், நெறியாழ்கை, கதாநாயன், வில்லன் என ஒரங்க நாடகமாக இது தயாரிக்கப்பட்டு அரங்கேறியுள்ளது.
தந்தை செல்வா 1976, ல் எடுத்த தீர்க்கதரிசன்முடிவு தமிழர் விடுதலை கூட்டணி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியபோது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இருந்ததமையால்த்தான் 2004ம் ஆண்டு தமிழரசுக்கட்சி கைகொடுத்தது.
கடந்த 1949, டிசம்பர்,18,ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி எதிர்வரும் 2024, டிசம்பர்,18, ல் 75, வது பவழவிழா நாளாகும். இந்த பவழவிழா ஆண்டில் 17, வது தேசிய மகாநாட்டில் ஒன்பதாவது புதிய தலைவராக பதவி ஏற்று தலைமை பேருரையாற்றும் 55, வயதுடைய சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தது அது இப்போது தடை பட்டாலும் விரைவில் தர்மம் வெல்லும்.
தொடர்..
உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், அம்பாறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன், திருகோணமலை மாவட்ட தலைவர் ச.குகதாசன், மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாளஷ் நிர்மலநாதன், வவுனியா மாவட்ட தலைரும் பதில் பொதுச்செயலாளருமான சத்தியலிங்கம், புதிய தலைவர் சி.சிறிதரன் ஆகிய ஏழுபேரும் பல மணிநேரம் கலந்துரையாடி வாதப்பிரதி வாதங்களின் பின்னர் ஒரு இணக்கபபாடு எட்டப்பட்டது. இந்த இணக்கப்பாட்டு அடிப்படையிலேயே நாளை 19, ம் திகதி மாநாடு இடம்பெற இருந்தது
அந்த இணக்கப்பாடானது முதல் ஒருவருடம் திருகோணமலை ச.குகதாசனும், மறு வருடம் மட்டக்களப்பு ஞா.ஶ்ரீநேசனும் பொதுச்செயலாளராக பணிபுரியவது என இணக்கம் காணப்பட்டது.
இந்த இணக்கத்தின் அடிப்படையில்தான் கடந்த ஜனவரி 27,ம் திகதி ஒத்திவைக்கப்பட்ட 17, வது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மகாநாடு நாளை (19/02/2024) மீண்டும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடந்த 15ம் திகதி சிறிதரனுக்கு எதிரான அணியை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இரண்டு மாவட்டங்களில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றமை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் அதற்கு துணைபோனவர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறுவதை காணலாம்.
தந்தை செல்வா 1949, ல் தமிழரசுகட்சியை ஆரம்பித்து
அவருடைய வழியை தொடர்ந்து பின்னர் தலைவராக செய்பட்ட ஏனைய தலைவர்களான கு.வன்னியசிங்கம், அ.இராஜவோதயம்
சி.மூ.இராசமாணிக்கம்,
இ வ நாகநாதன்,அ.அமிர்தலிங்கம்.
இரா சம்பந்தன்,மாவை சேனாதிராசா. ஆகியோரும் கட்சி உபவிதிகளுக்கு அப்பால் சில விடயங்களை கட்சி நலன் கருதி சம்பிரதாயம். விட்டுக்கொடுப்பு, சமூகநலன், பிரதேசநலன். என்பவற்றை அனுசரித்து தமிழரசுக்கட்சியை பாகுபாடின்றி ஒற்றுமையாக கடந்த 74, வருடங்கள் ஒரு தமிழ்தேசிய விடுதலை அரசியல் கட்சியாக தமிழ் மக்கள்மத்தியில் பிழவு படாமல் கட்டிக்காத்தனர். அவர்கள் தலைவர்களாக இருந்த வேளையில் நீதிமன்றம் தடை சட்டம் என எவருமே கட்சியை மீறி செல்லவில்லை.
ஆனால் கட்ந்த 21/01/2024, ல் வாக்கெடுப்பு மூலமாக புதிதாக தற்போது தெரிவான தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவாகி அடுத்த கட்ட நடவடிக்கையை ஒற்றுமையாக முன்எடுக்கும் ஆயத்தங்களை இணக்கப்பாடுடன் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்போது அதனை பொறுத்துக்கொள்ளாத சக்திகள் பொறாமையினால் தடை உத்தரவை பெற்றனர்.
தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனமானது கடந்த 1976, மே,14,ல் வட்டுக்கோட்டை தீர்மானம் எடுக்கும்போது அவர் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை கலைத்துவிட்டு அல்லது செயல் இழக்க வைத்துவிட்டு தமிழர் விடுதலை கூட்டணியை் ஆரம்பிக்கவில்லை தமிழரசுக்கட்சியை அப்படியே வைத்துவிட்டே தனியாக அடுத்த கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியை உதயசூரியன் சின்னத்துடன் உருவாக்கப்பட்டு முதல் முதலாக 1977, பொதுத்தேர்தலை சந்தித்து பின்னர் 2000, ம் ஆண்டுவரை அந்த கட்சி தனித்துவமாக்செயல்பட்டது மட்டுமின்றி பல தேர்தலகளை சந்தித்தது அதனால்தான் 2001, ல் தமிழ்ததேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் ஆதரவுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது தமிழர் விடுதலை கூட்டணிதான் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கட்சியாக இருந்தது.2001 தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலாவது தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்டது.
ஆனால் அதன்பின்னர் ஆனந்தசங்கரியின் துரோகத்தால் 2004, ல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலை கூட்டனணியில் தேர்தல் கேட்க முடியாமல் ஆனந்தசங்கரியார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றதனால் 2004, பொதுத்தேர்தலில் மீண்டும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் தேர்தலை சந்திக்குமாறு விடுதலைப்புலிகளின் தலைவர் கட்டளை இட்டு இன்றுவரை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தமிழினத்தின் தாய்க்கட்சியாக செயல்படுகிறது.
2004, ல் ஆனந்தசங்கரி செய்த துரோகத்தை இப்போது 2024, ல் தமிழரசுக்கட்சியில் உள்ள கறுப்பாடு ஒன்றின் ஆலோசனையில் செய்யப்பட்டுள்ளது. அந்த கறுப்பாடு யார் என்பது கட்சி உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும் அதை நான் குறிப்பிடவில்லை தயாரிப்பு, இயக்கம், நெறியாழ்கை, கதாநாயன், வில்லன் என ஒரங்க நாடகமாக இது தயாரிக்கப்பட்டு அரங்கேறியுள்ளது.
தந்தை செல்வா 1976, ல் எடுத்த தீர்க்கதரிசன்முடிவு தமிழர் விடுதலை கூட்டணி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியபோது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இருந்ததமையால்த்தான் 2004ம் ஆண்டு தமிழரசுக்கட்சி கைகொடுத்தது.
கடந்த 1949, டிசம்பர்,18,ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி எதிர்வரும் 2024, டிசம்பர்,18, ல் 75, வது பவழவிழா நாளாகும். இந்த பவழவிழா ஆண்டில் 17, வது தேசிய மகாநாட்டில் ஒன்பதாவது புதிய தலைவராக பதவி ஏற்று தலைமை பேருரையாற்றும் 55, வயதுடைய சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தது அது இப்போது தடை பட்டாலும் விரைவில் தர்மம் வெல்லும்.
-பா.அரியநேத்திரன்-