நாவிதன்வெளியில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அறநெறி பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் இன்று (16) நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

அறநெறி பாடசாலை கல்வியின் அவசியம், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய பாடத்திட்டம் தொடர்பில் விளக்கமளித்தல், அறநெறி பாடசாலைகளில் மாணவர்களை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  இந்து கலாசார திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் கே ஜெயராஜ், நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே. நீலேந்திரன், திருமதி. பா. சரோஜினி, மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் திருமதி வி. நகுலநாயகி, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸ் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.