சரவணமுத்து சுரேஷ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்

(கலைஞர்.ஏ.ஓ.அனல்)

கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரி ஆசிரியர் சரவணமுத்து சுரேஷ் இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக நேற்று (08.02.2024) வியாழக்கிழமை நியமனம் பெற்றார்.

கல்முனை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் அகிலஇலங்கை நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அம்பாறை மாவட்டம் துரைவந்திய மேடு கிராமத்தினை சேர்ந்த இவர் துறைநீலாவனை மாகாவித்தியாலய பாடசாலையில் உயர்தர கல்வியை கற்றவர் என்பதுடன் துரைவந்தியமேடு கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான முதலாவது உள்வாரி மாணவர் என்பது சிறப்புக்குரியது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டத்தினையும்
இலங்கை திறந்த பல்கலைக்கழத்தில் பட்ட பின் கல்வி டிப்ளோமா பட்டத்தினையும் பெற்ற இவர் தற்போது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி கற்கையை கற்கின்றார்.

சரவண முத்து சுரேஷ் துரைவந்தியமேடு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் துரைவந்தியமோடு மாணிக்க பிள்ளையார் ஆலயம் நிருவாகங்களின் முன்னாள் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.