கலைஞர்.ஏ.ஓ.அனல்)

எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருப்பதனால் பிரிந்து செல்ல முடியாது

  • அமைச்சர் மனுஷ நாணயக்கார

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட சவாலை எதிர்கொள்ள அனைவரும் தயங்கினர் ஆனால் , தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சவாலை எதிர்கொண்டார் நாட்டு மக்களின் நலனுக்காக நாம் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு அளித்தோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார அவர்கள் தெரிவித்தார்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் அனுராதபுர சல்காத்து விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கையை வெற்றி கொள்வோம்” மக்கள் நடமாடும் வேலைத்திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு சிரம வாசனா நிதியத்தினால் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது அமைச்சர் இதனைக் கூறினார்.
இதன் பெருமையை நாட்டின் தொழிலாளர்களுக்கு வழங்க வெண்டும் என வலியுறுத்தினார்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்
நாம் நாட்டை இவ்வாறு முன்நோக்கி கொண்டு மக்களை வெற்றிபெறச்செய்ய விரும்புகிறோம்
இந்த தாய்மார்கள்
நாங்கள் உங்களை விட சிறந்த காலத்தை பிள்ளைகளுக்கு ஏற்படுத்த உழைக்கிறோம்.
நாட்டில் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன

அப்போது இருந்ததை விட நாட்டில் நல்ல மாற்றம் தற்போது இருப்பதை காணலாம் .

எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருப்பதனால் பிரிந்து செல்லாது ஒன்றிணைந்து செல்ல வேண்டும்
எங்களுக்கு கட்சி நிறம் தேவையில்லை,நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டியதே அவசியமாகும் .

சிரம வாசனா நிதியம் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கானது .
இந்த பணத்தில் தகரங்கள், மலசக் கூடம் கடைகள் போன்றன வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக விநியோகிக்கப்பட்ட வரலாற்றை மாற்றியுள்ளோம்.

அதாவது மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டோம்.
இன்று இந்த நிதி உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கிறோம்.
இந்ப் பிள்ளைகளை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி இவற்றையெல்லாம் செய்கிறார்.

என்னுடைய இந்த பயணத்தில் கைகோர்த்துச் செல்ல உங்களை அழைக்கிறேன் என அமைச்சர் கூறினார்.