சிங்கள பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.

(கலைஞர்.ஏ.ஓ.அனல்)

அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்கள் கொண்ட இரண்டாம் மொழி கற்றல் (சிங்களம்) பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின், மாகம்புர தலைமைக் காரியாலயத்தில் அதன் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.

இணையவழியில் கற்றலை நிறைவு செய்த ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஆகியோருக்கு இச்சான்றிதழ்கள் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களினால் வழங்கிவைப்பட்டது.

இந்நிகழ்வின் அதிதிகளாக அந் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.