சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையானது 2023 ஆண்டில் நடாத்திய சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் தேர்வுகளில் சித்தி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு விழா 03-02-2024 ஆந்திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்விற்கு சைவத் தமிழ் மன்றத்தின் தலைவர் சைவப்புலவர் சைவபண்டிதர் பேராசிரியர் தி.சதானந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா அவர்களும் கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம் அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.கி.குணநாயகம் அவர்களும் கலந்து உரையாற்றினர். பட்டமளிப்பு விழாவானது ஸ்ரீ புலவிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பட்டம் பெறுவோரது நடைபவனியுடன் ஆரம்பித்தது. இவ்விழாவில் ஆன்மீக அதிதியாகக் திருமுன்னிலை வகித்த சிவஸ்ரீ ந.முரசொலிமாறன் குருக்கள் அவர்கள் நந்திக்கொடியினை ஏற்றி, ஆசியுரையினையும் வழங்கினார். வரவேற்புரையை மன்றத்தின் பொதுச்செயலாளர் சைவப்புலவர் சைவபண்டிதர் செ.சாந்தரூபன் அவர்கள் வழங்கி வைத்தார், நன்றியுரையை உபதலைவர் சைவப்புலவர் சைவபண்டிதர் சோபா ஜெயரஞ்சித் அவர்கள் வழங்கி வைத்தார், சைவப்புலவர் சைவபண்டிதர் சிவஸ்ரீயோ.கஜேந்திரா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியிருந்தார். தேர்வுச் செயலாளர் சைவப்புலவர் சைவபண்டிதர் சிவஸ்ரீ தெ.தயமுகன் அவர்கள் பட்டமளிப்பினை நெறிப்படுத்தியிருந்தார். இந்நிகழ்விற்கான வரவேற்பு நடனத்தையும், நடைபவனிக்கான இன்னிய இசை அணியினையும் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் வழங்கி சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் திருமுறை விண்ணப்பத்தினையும் தமிழ்மொழி வாழ்த்தினையும் சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவிகளான பிரதாயினி பிரதீபன் அவர்களும் பவதாரணி முகருகதாஸ் அவர்களும் வழங்கியிருந்தனர். இப்பட்டமளிப்பு விழாவில் சைவபண்டிதர் ஒருவரும் இளஞ்சைவ பண்டிதர்கள் பதினாறுபேரும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இவர்களுக்கான பட்டத்தினை மன்றத்தின் போசகர் சைவப்புலவர் சைவபண்டிதர் கலாநிதி சா.தில்லைநாதன் அவர்கள் வழங்கி வைத்தார். செல்வி. சிவானந்தராசா அபிஷனா (மகிழூர்முனை) சைவ பண்டிதர் பட்டத்தினையும், திருமதி. சாந்தி ஆனந்தகிருஷ்ணன் (கொழும்பு), செல்வி. கிருஷ்ணன் விதுர்சனா (முத்துக்கல்), செல்வி. சுந்துராஸ் பவேர்த்தனா (வீரமுனை), செல்வி. திருச்செல்வம் மதுஷானி (வீரமுனை), திருமதி தயனி கிருஷ்ணாகரன் (புதுக்குடியிருப்பு), செல்வி. தேவகடாட்சம் தனுஜா (கோமாரி), செல்வி ரஞ்சித்குமார் ரஜித்தா (ஆயித்தியமலை), செல்வி. நாகரூபிணி மாடசாமி (பேசாலை), செல்வி பாலச்சந்திரன் டினோஜா (கிளநொச்சி), செல்வி. ஐயனார் கோகிலவாணி (ஹட்டன்), செல்வி. ஜனார்த்தனி பரமேஸ்வரராஜா (நாவற்குடா), திரு. முத்துகுமார் கிருஷ்ணகுமார் (தெனியாய), செல்வி. சாந்தகுமார் பிரியங்கா (புதுக்குடியிருப்பு), செல்வி.தேவதாசன் ஜனனி (பதுளை), செல்வி ஜெயகுமார் விஜயரூபா (வவுனியா), சிவஸ்ரீ குலசிங்கம் சுபாஷ்கர் (நாவிதன்வெளி) ஆகியோர் இளஞ்சைவ பண்டிதர் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டனர்.