செயலாளராக ஞா. சிறிநேசன் தெரிவு செய்யப்பட வேண்டும் :அதுவே பரவலான விருப்பம்!
75 வருடங்களாக பேணப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கமைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தெரிவை தொடர்ந்து இன்றைய தினம் 11 மணியளவில் திருகோணமலையில் வைத்து ஏனைய தெரிவுகள் நடைபெறவுள்ளன.
தலைவர் தெரிவின் போது பொது சபையில் பங்குபற்றியவர்களே இன்றைய நிகழ்விலும் பங்குபற்றுவார்கள்.
மத்திய செயற்குழு கூட்டம்
இதற்கு முன்னர் ஏற்கனவே இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்,முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற இருக்கின்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி
இதன்பின்னர் செயலாளர்,துணை செயலாளர், துணை தலைவர்கள் என்ற வகையில் சுமார் 33 பேர் மத்தியகுழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டதிற்கு பின்னர் நான் செயலாளராக ஞானமுத்து சிறீநேசனை முன்மொழிந்தேன். இதற்கு பலரும் நான் ஏன் அவரை முன்மொழிய வேண்டும் என கேட்டனர்.அதற்கு காரணம் இருக்கின்றது.
2019 ஆம் ஆண்டு இறுதியை இடம்பெற்ற தேசிய மாநாட்டின் போது,பொதுச்செயலாளராக எனது பெயரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஐயா முன்மொழிந்திருந்தார்.அதனை எவருமே வழிமொழியவில்லை.
காரணம் ஏற்கனவே இருந்தவர்களை,தலைவர், செயலாளராக அமர்த்த அனைவரும் விரும்பினார்கள் அதனால் நானும் அதை பெரிதுபடுத்தவில்லை.
இப்போது எனக்கெதிராக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.அதாவது நான் செயலாளராக வர முயற்சிக்கிறேன்,அதனால் தான் தலைவர் தெரிவில் சிறீதரனை ஆதரித்தேன் என கூறுகின்றனர்.அதை முறியடிக்கவே நான் தலைவர் தெரிவுக்கு முன்பாகவே ஞானமுத்து சிறீநேசனை முன்மொழிந்திருந்தேன்.