Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the post-slider-and-carousel domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kalmowix/public_html/wp-includes/functions.php on line 6114
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மருத்துவ சேவையின் புள்ளி விபரங்கள் - Kalmunai Net

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மருத்துவ சேவையின் புள்ளி விபரங்கள்

அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்தியத்தில் மகத்தான மருத்துவ சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களுக்காக வழங்கப்பட்ட சிகிச்சைகளின் புள்ளி விபரங்களின் தொகுப்பு பின்வருமாறு,

வைத்தியசாலையின் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நோயாளிகள் (Inward Admissions) – 37620, வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் (OPD Patients) – 147079, சாய்சாலை நோயாளர் (Clinic Patients) – 112831, வைத்தியசாலையில் நடைபெற்ற சத்திர சிகிச்சைகள் (General Surgeries) – 3804, பாரிசவாத சிகிச்சைகள் (Stroke Patients) – 331, கண் சத்திர சிகிச்சைகள் (Eye Surgeries) – 2603, இருதய நோய் சாய்சாலையில் சிகிச்சை பெற்றவர்கள் (Cardiology Clinic patients) – 5208, என்பு முறிவு சாய்சாலை நோயாளர்கள் (Orthopaedic Clinic Patients) – 4302, என்புமுறிவு சத்திர சிகிச்சைகள் (Orthopaedic Surgeries) – 262, மகப்பேற்று பிரிவில் 696 குழந்தைகள் சாதாரண பிரசவத்திலும் (Normal Deliveries) மற்றும் சத்திர சிகிச்சை மூலம் (LSCS Deliveries) 661 குழந்தைகளும் பிரசவித்துள்ளது. மேலும் CT ஸ்கேன் சேவை எண்ணிக்கை – 5544, ஆய்வுகூட பரிசோதனைகள் – 540000 மற்றும் இதர மருத்துவ சேவைகளாக ECG, Daycare Surgeries, இயன் மருத்துவ சேவை (Physiotherapy), நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் (Patient Safety and Health Information Desk/ Relax), X – Ray, USS போன்றவற்றின் மூலம் கிட்டத்தட்ட 111216 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2023 ஆம் ஆண்டு மாத்திரம் 372 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வீடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ் வைத்தியசாலையில் கல்முனை பிராந்திய மக்கள் மட்டுமன்றி ஏனைய வெளி பிராந்தியங்களில் இருந்து வருகை தந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.