பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்.

பெரியநீலாவணை பிரபா.

கல்முனை கல்வி வலையத்தினுள் உள்ளடங்கும் பெரிய நீலாவணை கமு/விஷ்ணு மஹா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக அதிபர் தரத்தில் சித்தி பெற்ற பெரிய நீலாவணையை சேர்ந்த சந்திரலிங்கம் சதீஷ்குமார் கல்முனை வலைய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார் .


இவர் தனது ஆரம்பக் கல்வியை கமு/பெரியநீலாவணை
சரஸ்வதி வித்யாலயத்திலும், அதனைத் தொடர்ந்து உயர்கல்வியினை கமு/விஷ்ணு மஹா வித்தியாலயத்திலும் கற்றதோடு வவுனியா கல்வியியல் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளமோ, தேசிய கல்வி நிறுவனத்தின் ஊடாக கல்விமானி பட்டமும் பெற்றுள்ளார் .


பெரிய நீலாவணையில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளில் உறுப்பினராக இருந்து மக்களுக்காகவும் கிராமத்துக்காகவும் பல்வேறு சமூக செயல்பாடுகளிலும் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.